7/15/2011

இந்திய உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2தொழில் பயிற்சி நிலையங்கள்

இந்திய உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2தொழில் பயிற்சி நிலையங்கள்.


இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்கே காந்தா மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும ஆகியோருக்கிடையில் இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இன்று இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2தொழில் பயிற்சி நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும் இதற்காக இந்திய அரசு 327 மில்லியன் ரூபாவினை வளங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். மாவட்ட தொழில் பயிற்சி நிலையம் வந்தாறுமூலையிலும் கிராமிய பயிற்சி நிலையம் ஓந்தாச்சி மடத்திலும் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். வந்தாறுமூலையில் அமைக்கப்படும் மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தில் 3புதிய பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் இது தெபாடர்பான பயிற்சி நெறியை வழங்குவதற்கு இந்தியாவில் இருந்து பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் வரவளைக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக பயிற்சி நெறிகளை தொடங்க இங்கிருந்து இந்தியா சென்று மேலதிக தொழில் பயிற்சிநெறியினை பெறவுள்ளதாகவும் கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment