4,35,000 பேர் வாக்களிக்க தகுதி
வடபகுதியில் அமைதியான தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் திருப்தியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களிலுள்ள 19 உள்ளூராட்சி சபைகளுக்கு நடைபெறவிருக்கும் தேர்தல்களில் 4 இலட்சத்து 35 ஆயிரத்து 604 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதுடன், வாக்களிப்பதற்கு 554 நிலையங்கள் அமைக்கப்பட விருப்பதாக அரசாங்க அதிபர் தினகரனுக்குக் கூறினார்.
நீதியான, சுதந் திரமான தேர்தலை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும் திருப்திகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், தேர்தல் வன்முறைகள் தொடர்பாகக்
கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளோம். அவற்றுக்கு எதிராக உடனடியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் மேலும் கூறினார்.
யாழ் தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வாக்களிப்பு நிலையங்கள் பற்றிய தகவல்கள் பின் வருமாறு,
உள்ளூராட்சி சபைகள் தகுதிபெற்ற வாக்களிப்பு
வாக்காளர்கள் நிலையங்கள்
வல்வெட்டித்துறை நகரசபை 5550பேர் 11
பருத்தித்துறை நகரசபை 7376 12
சாவகச்சேரி நகரசபை 10,987 13
காரைநகர் பிரதேசபை 8,140 14
ஊர்காவற்துறை பிரதேசபை 6,349 3
வேலணை பிரதேசசபை 12,028 27
வலி மேற்கு பிரதேசசபை 30,214 35
வலி வடக்கு பிரதேசசபை 63,224 51
வலி தென்மேற்கு பிரதேசசபை 31,072 39
வலி தெற்கு பிரதேசசபை 32,854 43
வலி கிழக்கு பிரதேசசபை 46,570 55
வடமராட்சி தென்மேற்கு பிரதேசசபை 32,539 42
பருத்தித்துறை பிரதேசசபை 25,375 31
சாவகச்சேரி பிரதேசசபை 37,015 38
நல்லூர் பிரதேசசபை 22,012 28
பச்சிலைப்பள்ளி பிரதேசசபை 7,116 18
கரச்சி பிரதேசசபை 42,800 58
பூநகரி பிரதேசசபை 11,301 19
0 commentaires :
Post a Comment