7/07/2011

முறக்கொட்டான்சேனைக்கான நாளாந்த சந்தைக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (06.07.2011) இடம் பெற்றது. இந் நிகழ்வில்  பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு இவ் அடிக்கல்லினை நாட்டி வைத்தார். மேற்படி சந்தை கட்டிடமானது கிழக்கு மாகாண முதலமைச்சருக்குரிய 25லட்சம் ரூபா நிதியில் நிர்மானிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோரளைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் உதயஜீவதாஸ் தலமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.சி.கிருஸ்னானந்தராஜா, பூ.பிரசாந்தன், பிரதேச செயலாளர் தவராசா, உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சத்தியானந்தி ஆகியோர்கள் கலந்து கொன்டார்கள்.

0 commentaires :

Post a Comment