7/27/2011

திருமலை செல்வநாயகபுர வீதி, மக்கள் பாவனைக்காக முதலமைச்சரினால் கையளிப்பு

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வநாயகபுரம் வீதி திறப்புவிழா இன்று பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபன் தலைமையில் இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உத்திNயுhக புரு;வமாக மக்களின் பாவனைக்காக கையளித்தார்.
»»  (மேலும்)

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை கட்டிடம் முதலமைச்சரினால் திறந்து வைப்பு.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கான அலுவலக கட்டிடம் இன்று (25.07.2011) உப்புவெளியில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் திறந்து வைக்கப்பட்டது.
பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளரும் விசேட ஆணையாளருமான திருமதி எஸ். ஜலதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.பாயிஸ், பிரதி தவிசாளர் ஆரியவதி கலப்பதி, மாகாண சபை உறுப்பினர் காமினி கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வி.பி. பாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
 

»»  (மேலும்)

7/26/2011

முதலமைச்சரின் அதீத முயற்சியின் அருங்கொடையே மட்டு மேற்கு கல்வி வலயம்.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் அயராத முயற்சியின் பயனால் உருவாக்கப்பட்டிருந்த மட்டு மேற்கு உப கல்வி வலயம் தற்போது மட்டு மேற்கு கல்வி வலயமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களினது வேண்டுகோளுக்கமைய இதற்கான அனுமதியினை கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம்.குணசேகர கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு வழங்கியுள்ளார். மேற்படி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கல்வி வலயத்தினுள் பட்டிருப்பு மட்டக்களப்பு மற்றும் கல்குடா ஆகிய கல்வி வலயங்களிலிருந்து 60 பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. இவ் வலயத்திற்கான கட்டிடம் போக்குவரத்துக்கள் மற்றும் இதர தேவைகள் அனைத்தையும் வெகு விரைவில் ஏற்படுத்தி தருவதாகவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.
வலயக்கல்வி பணிப்பாளராக கணபதிப்பிள்ளை பாஸ்கரன் கடமையாற்றுவார்.
»»  (மேலும்)

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முதலமைச்சருடன் சந்திப்பு.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சீமா இலாசி விலோச் க்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று திருமலை வரோதய நகரில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்றது.
மேற்படி சந்திப்பானது சினேகபூர்வமான ஓர் சந்திப்பாக இருந்த போதும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை அரசியல் பின்புலம் என்பன பற்றியும் பேசப்பட்டது. இச்சந்திப்பில் முதலமைச்சரின் சிரேஸ்ட்ட ஆலோசகர் கலாநிதி விக்னேஸ்வரன் மற்றும் முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அஷாட் மௌலான ஆகியோரும் கலந்து கொண்டனர்.

»»  (மேலும்)

இருமொழிகளிலும் தேர்ச்சி பெற்றோருக்கே அரச நியமனங்களில் எதிர்காலத்தில் முன்னுரிமை பதுளையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

“அரசினால் எதிர்வரும் காலங்களில் வழங்கப்படும் அரச நியமனங்கள் அனைத்தும் தமிழ் மற்றும் சிங்களம் போன்ற இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கே வழங்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை முன்னிலைப்படுத்தி மேற்கொண்டு வருகின்றேன்”
இவ்வாறு, தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பதுளை ரிவர்சைட் விடுதியில் 17-06-2011 நடைபெற்ற செயலமர்வொன்றில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில் குறிப்பிட்டார்.
இச்செயலமர்வில் சமூக முக்கியஸ்தர்கள், ஊடகவியலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தொடர்ந்தும் பேசுகையில், “கடந்த 2007ம் ஆண்டிற்குப் பிறகு வழங்கப்பட்ட அரச நியமனங்களில் ஐந்து வருடங்களுக்குள் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. அத்தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
அவ்வகையில் 26 ஆயிரம் பேர் இரு மொழிச் தேர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அத்தேர்ச்சி பெற்றிருந்தும் கூட ஒரு மொழியில் மட்டுமே அவர்கள் கடமைகளை மேற்கொண்டனர். இது போன்ற நிலை ஆரோக்கியமானதோர் சூழலைத் தோற்றுவிக்காது. மொழி உரிமை மீறப்படாத வகையில் அரச அலுவலகங்கள் அனைத்திலும் செயல்பாடுகள், முன்னெடுக்கப்படல் வேண்டியது அவசியமாகும்.
அரச நியமனங்களைப் பெற்றிருப்பவர்களுக்கு இரு மொழி தேர்ச்சி பயிற்சிகள் இடம்பெற்று வரும் அதேவேளையில் புதிதாக நியமனங்கள் வழங்கப்படும் போது, இரு மொழிகளில் தேர்ச்சி முன்னிலைப்படுத்தப்படும். இரு மொழி தேர்ச்சி இல்லாதவர்களுக்கு எதிர்காலங்களில், அரச நியமனங்கள் வழங்கப்பட மாட்டாது.
ஊவா மாகாண சபை உறுப்பினர் க. வேலாயுதம் விடுத்த கோரிக்கைக்கமைய பிரதேச மட்டத்தில் மொழி உரிமை விடயங்களை நடைமுறைப்படுத்தாமல், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இரு மொழிக் கொள்கை முன்னெடுக்கப்படல் வேண்டும். வட, கிழக்கில் ஒரு மொழி, தென்பகுதியில் ஒரு மொழியுமென்ற நிலை மாற்றப்பட வேண்டுமென்பதை, நான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். அரசியலமைப்பிலும், அதே நிலை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு, எனது அமைச்சை சார்ந்ததாக இல்லாத போதிலும் பாடசாலை மட்டத்திலிருந்தே, இரு மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் நன்கு தேர்ச்சியுள்ளதும், ஆற்றலுள்ளதுமான திறமையான ஆசிரியர்களையே, அம்மொழிகளைக் கற்பிக்க ஈடுபடுத்தப்படல் வேண்டும். அவ் வகையிலான ஆசிரியர்களை இனம் கண்டு தெரிவு செய்ய வேண்டும். வெறுமனே ஆசிரியர்களாக இருப்பவர்கள், எல்லோருக்கும் கற்பிக்கும் தேர்ச்சி இல்லையென்பது இங்கு விளக்கமாக முன்வைக்கப்பட்டிருந்தது.
மொழி உரிமை விடயத்தில், சர்வதேச நாடுகளின் உதவிகளை எனது அமைச்சு கோரியிருக்கின்றது. தற்போதைய நிலையில் கனடா அரசு, இவ்விடயத்தில், எமது அமைச்சிற்கு நிதி உதவியளித்துள்ளது.
»»  (மேலும்)

7/25/2011

நோர்வே தாக்குதலில் கைதான நபர் தம் மீதான குற்றச்சாட்டுக்கு ஒப்புதல் பலியானோர் எண்ணிக்கை 92 ஆக அதிகரிப்பு

  நோர்வே குண்டு தாக்குதல் மற்றும் இளைஞர் முகாம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ஆகிய குற்றச்சாட்டில் கைதான 32 வயதான நபர் தம் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
வலதுசாரி கிறிஸ்தவ தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்று கருதப்படும் மேற்படி அன்டர்ஸ் பெஹ்ரின் பிரைவிக் என்ற நபர், இந்த கொலை கொடூரமானது எனவும், ஆனால் கட்டாயம் நடத்தப்பட வேண்டிய தாக்குதல் எனவும் தனது வழக்கறிஞரிடம் கூறியுள்ளார். பெர்விக் மீது இன்று நீதிமன்ற விசாரணை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஒஸ்லோ குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நோர்வேயில் மிகக் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
விடுமுறையைக் கொண்டாடுவதற்காக இங்குள்ள இடிலிக் உடோயா தீவில் பெருமளவிலான இளைஞர்கள் திரண்டிருந்தனர். அவர்களை நோக்கி பொலிஸ் உடையணிந்த பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவம் நாட்டின் பாது காப்பை மேலும் அதிகரிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது என்று பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை காலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மிக துயரமான சம்பவத்துக்குக் காரணமானவர்களை பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாகக் கூறினார்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர் பில் கைது செய்யப்பட்ட நபரின் விபரம் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் தன்னை ஆண்டர்ஸ் பெஹ்ரிங் பிரெவிக் என அடையாளப்படுத்திக் கொண்டதாக உள்ளூர் பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
தாக்குதல் நடத்திய இளைஞருக்கு 32 வயது இருக்கும் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இவர் முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார் என்று பொலிஸ் ஆணையாளர் ஸ்வைனங் ஸ்போனிம் தெரிவித்தார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவருக்கு வலதுசாரி தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் நோர்வேயிலிருந்து வெளியாகும் சில செய்திப் பத்திரிகைகளில் பேஸ்புக் பக்கத்தில் பழைமைவாத, கிறிஸ்தவ, கணனி விளையாட்டுக்களில் உலகப் போர் சார்ந்த நவீன போர் விளையாட்டுகள் பிடிக்கும் என அந்த இளைஞன் குறிப்பிட்டிருந்ததாக செய்திகள் வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் 8 பேர் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்தனர். அரசு கட்டடம், பிரதமர் அலுவலகம் மற்றும் நிதி அமைச்சக அலுவலகம் ஆகியவற்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இவர்கள் உயிரிழந்தவர்களாவர்.
முதலில் அரசு கட்டடங்களுக்கு குண்டு வைத்து விட்டு பொலிஸ் உடையணிந்து உடோயா தீவுக்குச் சென்று அங்கு துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இத்தீவில் நடைபெற்ற முகாமில் சுமார் 560 இளைஞர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இந்த இளைஞர் முகாமுக்கு ஆளும் தொழிலாளர் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
துப்பாக்கி குண்டிலிருந்து தப்பிக்க விரைந்து ஓடி தண்ணீரில் மூழ்கி சிலர் இறந்துள்ளனர். நாஜிக்கள் படங்களில் வருவதைப் போல தாக்குதல் நடத்தப்பட்டதாக குண்டுக் காயத்துடன் தப்பி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அட்ரியன் பிரகான் என்பவர் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மிகவும் நெருக்கமாக நின்று துப்பாக்கியால் சுட்டதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார். முதலில் அருகிலிருந்தவர்களை சுட்ட பின்னர் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தவர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். அந்த இளைஞனின் கையில் “எம் 16” ரக துப்பாக்கி இருந்தது. அது தானியங்கி துப்பாக்கியாகும்.
அவரிடமிருந்து தப்பிக்க உயிரிழந்தவரைப் போல தரையில் விழுந்து தப்பித்தேன் என்றும் அவர் கூறினார். உயிரிழந்தவர்களை காலால் உதைத்து அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்று பார்த்துச் சென்றதாகவும் தான் 2 மீற்றர் தூரத்தில் படுத்திருந்ததால் தன்னிடம் வரவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்தத் தீவில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் தீவு முழுவதிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். உடோயா தீவுக்கு 1974 ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் வருவதாகக் குறிப்பிட்ட அவர் இந்தத் தீவில் மகிழ்ச்சிக்கு ஒருபோதும் குறைவிருக்காது. அதே சமயம் பாதுகாப்பானதும் கூட ஆனால் இப்போது வன்முறைக் களமாகிவிட்டது என்று பிரதமர் ஸ்டோல்டென்பெர்க் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
ஐரோப்பாவில் மிகவும் அமைதியான நாடாக நார்வே திகழ்ந்து வந்தது. இந் நிலையை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அவர் குறிப்பிட்டார். இதற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனை அளிக்கப்படும் என்று அவர் கூறினார்
»»  (மேலும்)

உள்@ராட்சி சபை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி பெரு வெற்றி 65 சபைகளில் 45இன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது

ஐ.தே.க.வின் சகல கோட்டைகளும் வீழ்ந்தன் ஜ.வி.பியும் படுதோல்வி
முல்லைத்தீவில் பிரiஜகள் முன்னணிக்கு இரண்டு ஆசனங்கள்
கிளிநொச்சியில் இரு சபைகள் ஆனந்தசங்கரி வசமாகியது

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 45 சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் பாரிய வாக்கு சரிவுக்கு முகம் கொடுத்து சகல உள்ளூராட்சி சபைகளிலும் படுதோல்வி அடைந்துள்ளன.
இத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கிலுள்ள 18 உள்ளூராட்சி சபைகளையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 02 சபைகளையும் வெற்றி பெற்றுள்ளது.
நாட்டிலுள்ள 65 உள்ளூராட்சி சபைகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற இத் தேர்தலில் 55-60 சதவீதமான வாக்காளர்கள் வாக்களித்ததாக தேர்தல் செயலகம் நேற்று முன்தினமிரவு அறிவித்தது. இருப்பினும் யாழ்.
மாவட்டத்தில் 46 சதவீதமானோரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 65 சதவீதமா னோரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 65 சதவீதமானோரும் இத்தேர்தலில் வாக்க ளித்ததாக அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் கூறினர். பயங்கரவாதம் முழு மையாக ஒழிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற தேர்தல் இது என்ப தால் வட பகுதி மக்கள் அச்சம், பீதியின்றி சுதந்திரமான முறையில் வாக்களிப்பில் கலந்து கொண்டதாக தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த உள்ளூராட்சி சபை களுக்கான வாக்களிப்பு நேற்று முன்தினம் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்ற போதிலும் முதலாவது தேர் தல் முடிவு இரவு 8.50 மணிக்கு வெளி யானது. என்றாலும் நேற்றுக் வெளியாகியிருந்தன. இத்தேர்தலில் தலவாக்கலை – லிந்துலை நகர சபைக்கான தேர்தல் முடிவே முதலாவதாக வெளியானது. இதில் ஐ. ம. சு. முன்னணி ஏழு ஆசனங்களைப் பெற்று பெரு வெற்றி அடைந்தது. ஐ. தே. க. வுக்கு இரு ஆசனங்களே இச் சபையில் கிடைத்தன.
இந்த 65 உள்ளூராட்சி சபைகளில் ஒரு மாநகர சபையையும், ஆறு நகர சபைகளையும், 38 பிரதேச சபைகளையும் ஐ. ம. சு. மு. வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி மூன்று நகர சபைகளையும், 15 பிரதேச சபைகளையும் தமிழர் விடுதலைக் கூட்டணி இரு பிரதேச சபைகளையும் வெற்றி பெற்று இருக்கின்றன.
இதேநேரம் ஐ. ம. சு. முன்னணி யாழ். குடாநாட்டிலுள்ள நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை ஆகிய மூன்று பிரதேச சபைகளையும் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி யாழ். குடாநாட்டில் 13 உள்ளூராட்சி சபைகளையும், அம்பாறை மாவட்டத்தில் இரு உள்ளூராட்சி சபைகளையும், கிளிநொச்சி, முல்லைதீவு, திருமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தலா ஒரு பிரதேச சபைப்படி மூன்று உள்ளூராட்சி சபைகளை வெற்றி பெற்றுள்ளது.
இத்தேர்தலில் ஐ. ம. சு. மு. ஹோமாகம பிரதேச சபையை 52 ஆயிரத்து 197 மேலதிக வாக்குகளாலும், கடுவெல மாநகர சபையை 39 ஆயிரத்து 90 மேலதிக வாக்குகளாலும், அத்தனகலை பிரதேச சபையை 36 ஆயிரத்து 239 மேலதிக வாக்குகளாலும், வராக்கபொல பிரதேச சபையை 25 ஆயிரத்து 120 மேலதிக வாக்குகளாலும், வென்னப்புவ பிரதேச சபையை 19 ஆயிரத்து 147 மேலதிக வாக்குகளாலும் வெற்றி பெற்றுள்ளது.
அத்தோடு ஆறு உள்ளூராட்சி சபைகளை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேலதிக வாக்குகளாலும், 12 சபைகளை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேலதிக வாக்குகள் வீதத்திலும் ஐ. ம. சு. முன்னணி கைப்பற்றி இருக்கின்றது.
இலங்கை தமிழரசு கட்சி இரண்டு சபைகளையே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. இந்த உள்ளூ ராட்சி சபைகளுக்கென 875 பிரதி நிதிகளை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற இத் தேர்தலில் 5688 பேர் அபேட்சகர்களாகப் போட்டி யிட்டனர். இவர்களில் ஐ. ம. சு. சார்பில் 512 பிரதிநிதிகளும், இல ங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 183 பிரதிநிதிகளும், ஐ. தே. க. சார்பில் 137 பிரதிநிதிகளும், ஜே. வி. பி. சார்பில் 13 பிரதிநிதிகளும், தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் 12 பிரதிநிதிகளும், ஸ்ரீல. மு. கா. சார்பில் 7 பிரதிநிதிகளும், பிரஜை கள் முன்னணி சார்பில் 2 பிரதிநிதி களும், ல. ச. ச. கட்சி சார்பில் ஒரு பிரதி நிதியும், சுயேச்சை குழுக்கள் சார் பில் 8 பிரதிநிதிகளும் தெரிவாகி யுள்ள னர். காலை 6.40 மணியளவில் சகல உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
»»  (மேலும்)

திருக்கோவில் பிரதேச சபை : தமிழரசுக் கட்சி இரு பிரதிநிதிகளை இழந்தது

திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி இரு ஆசனங்களை இழந்தது. கடந்த தேர்தலில் 8318 வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி 9 ஆசனங்களையும் பெற்றிருந்தது.
ஆனால், இம்முறை அக் கட்சி 6865 வாக்குகளை மாத்திரம் பெற்று 07 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1249 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத் தையும், ஐ. தே. கட்சி 810 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது. அதன்படி வரலாற்றில் முதன் முறையாக திருக்கோவில் பிரதேச சபையில் 2 ஆசனங்களை தமிழரசுக் கட்சி பறிகொடுத்துள்ளது.
கடந்த 03 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 04 ஆசனங்களையும், நாவிதன்வெளிப் பிரதேசத்தில் 02 ஆசனங்களையும், தமிழரசுக்கட்சி இழந்திருந்தமை தெரிந்ததே. ஆனால், காரைதீவு பிரதேச சபை மாத்திரம் அதே வலு வான நிலையில் உள்ளமை குறிப் பிடத்தக்கது.
»»  (மேலும்)

7/24/2011

அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று திறப்பு விழா.

இன்று வவுணதீவு பிரதேச செயலாளருக்குட்பட்ட பிரிவில் அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலக திறப்பு விழா இன்று பிரதேச செயலாளர் தலமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இவ் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண கால்நடை, மீன்பிடி, மற்றும் விவசாய அமைச்சர் து.நவரெட்ணராஜா, கிழக்கு  மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், எ.சி.கிருஸ்னாநந்தராஜா மற்றும் வவுணதீவு பிரதேச தவிசாளர் மற்றும் ஏனைய உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டார்கள்.

»»  (மேலும்)

வாழைச்சேனை கல்குடா வீதியின் அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பம்.

இன்று வாழைச்சேனை பிரதேசத்தில் வீதி திறந்து வைக்கும் வைபவம் பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் தலமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் திறந்து வைத்தார். இந் நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர்கள், மற்றும் ஏனைய உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டார்கள்.

»»  (மேலும்)

"கொட்டியாரம் நூல் அறிமுக நிகழ்வை" தவிர்க்கிறோம்

norway.jpg
»»  (மேலும்)

7/23/2011

அங்கவீனர்களுக்கு மாதாந்த கொடுப்பணவு வழங்கும் நிகழ்வு

   மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் யுத்தத்தினாலும், இயற்கை அணர்த்தங்களினாலும் அங்கவீனமாக்கப்பட்டவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பணவு முதன்முறையாக இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் வலுவிழந்தோருக்கு வழங்கப்படும் இக் கொடுப்பனவானது மண்முனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 34பேருக்கு வழங்கி வைக்கப்பட்டன. இவர்களின் கொடுப்பனவுக்கான காசோலைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வழங்கி வைத்தார். இதன் போது வலது குறைந்தவர்களுக்கான முற்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன. மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கலாமதி பத்மராஜா தலமையில் மட்டக்களப்பு சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், அதிகாரிகள்; உட்பட பலர் கலந்து கொண்டனர். இக் கொடுப்பணவு இவர்களின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படவுள்ளன.

»»  (மேலும்)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்பாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெடர்பாகவும்; வெளியிடப்பட்ட செய்தி தொடர்பான மறுப்பறிக்கை.

20.07.2011 இணைய பதிப்பிலும் 21.07.2011 நகரப் பதிப்பிலும் வெளியான த ஐலண்ட் பத்திரிகையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்ட முன்பக்க செய்தியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்பாக கட்சித்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான திரு சிவநேசதுரை சந்திரகாந்தனின் பெயரையும் தொடர்பு படுத்தியும் பிரசுரிக்கப்பட்ட செய்தியானது முற்றிலும் உண்;மைக்கு புறம்பான செய்தி என்பதுடன் கட்சிக்கும் கட்சி தலைமைக்கும் அவகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை எழுத்தாளர் திரு, லால் குணசேகரவினால் வரையப்பட்ட செய்தியானது அடிப்படை பத்திரிகை தர்மத்தை மீறுவதும் கட்சியையும் கட்சிக்கு வாக்களித்த மக்களையும் அவமரியாதைக்கு உட்படுத்துவதுடன் கட்சி தொடர்பான தவறான அபிப்பிராயங்களை தோற்றுவிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட வகையில் புனையப்பட்தாக கட்சி கருதுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்; இடம் பெற்ற வங்கிக் கொள்ளையில் சட்டவிரோதமான நடவடிக்கையில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சியையும் அதன் தலைமையையும் தொடர்பு படுத்தும் பொழுது அவை தொடர்பான அக்கட்சியின் சார்பான கருத்துக்களும் இடமளிக்கப்பட்டிருக்க வேன்டும். இது தொடர்பில் கட்சி தலைவரையோ, செயலாளரையோ, ஊடகச் செயலாளரையோஅல்லது கட்சியின் ஊhடகப் பேச்சாளரையோ அணுகி எமது கட்சி தொடர்பான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இவ் அடிப்படைநெறி கூட பின்பற்றாமையால் குறிப்பிட்ட செய்தி முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டமையானது, மிக பாரிய தவறும் ஊடகத்துக்கு எதிரான செயலுமாகும்.
2008.01.23ம் திகதி எமது கட்சியானது தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தினால் இலங்கை அரசினால் அமைப்புக்கு உட்பட்டு அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக ஏற்று கொள்ளப்பட்ட பின்பு 09உள்ளுராட்சி சபைகளையும் , கிழக்கு மாகாணசபையையும் ஆட்சி செய்கின்ற கிழக்கு மாகாணத்திலுள்ள பொறுப்பு மிக்க அரசியல் கட்சியாகும். எமது கட்சி ஆயுத கலாச்சாரத்தில் தோற்றம் பெற்றதாயினும் சனநாயக அரசியல் நீரோட்டத்தில்  முழுமையான நம்பிக்கை கொண்டு சனநாயக அரசியலில் இனைந்த பின்பு எமது ஆயுதங்கள் அனைத்தும் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு வன்முறையற்ற அரசியல்கட்சியாக மக்கள் பணியாற்றுகின்றோம்.
இவ்வாறு சனநாயக அரசியில் நம்பிக்கை கொண்ட பொறுப்பு மிக்க அரசியல் கட்சி மீது ஆயதகலாச்சார,; சட்டவிரோத செயலில் தொடர்புபடுத்தி செய்தி வெளியிடுவதானது கட்சிக்கும் அதன் தலைமைக்கும் கழங்கம் ஏற்படுத்தும் செயலே அன்றி வேறொன்றும் இல்லை. எனவே ஆதாரமற்ற வகையில் உண்மைக்கு புறம்பான முறையில் கட்சியினதும் கட்சி தலைவரினது பெயரை தொடர்பு படுத்தி வெளியிடப்பட்ட தவறான செய்திக்கு தங்கள் பத்திரிகை பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என்பதுடன், தங்களது மன்னிப்பும் எமது மறுப்பும் முன்பக்கத்தில் அதிக முக்கியத்துவத்துடன் வெளியிடப்பட வேண்டும். இல்லாத விடத்து கட்சிக்கும் கட்சி தலமைக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டமைக்காக தங்கள் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதனையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.
எ.சி.கைலேஸ்வரராஜா,
செயலாளர்,
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.
»»  (மேலும்)

சீகிரியா கோட்டைக்குள் நுழையும் இரு இரகசிய வாயில்கள் கண்டுபிடிப்பு _

     காசியப்ப மன்னனின் பலம் வாய்ந்த கோட்டையாக விளங்கிய சீகிரியாவுக்கு பயணிப்பதற்காக அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கிழக்கு மற்றும் வடக்கு இரகசிய வாயில்கள் இரண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் காசியப்ப மன்னன் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கட்டிடங்களின் இடிபாடுகள், படிக்கட்டுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிட இடிபாடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சீகிரியா வேலைத் திட்டத்தின் முகாமையாளர் வஜிரபர் மினென்டஸ் தெரிவித்தார்.

சீகிரியாவைச் சுற்றியுள்ள பாரிய காட்டின் சுமார் ஆறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போதே இந்த இரகசிய வாயில்கள் மற்றும் கட்டிட இடிபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டா
»»  (மேலும்)

7/22/2011

65 உள்@ராட்சி சபைகளுக்கு நாளை தேர்தல் 875 பேர் தெரிவு

65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிவரை இடம்பெறும்.
ஒரு மாநகரசபை, 9 நகர சபைகள், 55 பிரதேச சபைகளில் நடைபெறும் இந்தத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
65 உள்ளூராட்சி சபைகளிலும் இருந்து 875 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 26 இலட்சத்து 30 ஆயிரத்து 985 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் நடைபெறும் பிரதேசங் களிலுள்ள சகல மக்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக 65 உள்ளூராட்சி சபைகளிலும் 2,226 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை 383 நிலையங்களில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.
65 உள்ளூராட்சி சபைகளில் கடுவெல மாநகர சபை, கெஸ்பாவ நகர சபை, மினுவாங்கொட நகர சபை, தலவாக்கலை - லிந்துல நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, பருத்தித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை, சிலாபம் நகர சபை, எம்பிலிபிட்டிய நகர சபை ஆகியவற்றுடன் 55 பிரதேச சபைகளுக்கும் எதிர்வரும் சனிக்கிழமை (23) தேர்தல் நடைபெறுகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 3 நகர சபைகள், மற்றும் 13 பிரதேச சபைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 3 இலட்சத்து 74 ஆயிரத்து 30 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இந்த 16 உள்ளூராட்சி சபைகளுக்காக 201 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
நுவரெலிய மாவட்டத்தில் தலவாக்கலை - விந்துல நகரசபைக்காக 9 உறுப்பினர்களை தெரிவு செய்ய 4187 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இம்முறை தேர்தலில் ஆகக்குறைந்த வாக்காளர்கள் எண்ணிக்கை தலவாக்கலை - லிந்துல நகர சபையிலேயே பதிவாகியுள்ளது.
இந்தத் தேர்தலில் 25 ஆயிரம் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
25ஆயிரம் அதிகாரிகளில் தெரிவத்தாட்சி அதிகாரிகள், தேர்தல் வாக்களிப்பு நிலைய அதிகாரிகள் எனப் பலர் உள்ளடங்குவதாக அவர் கூறினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 600 தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். யாழ்ப்பாணத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள அதிகாரிகளில் 90 வீதமானவர்கள் ஆண்கள் என்றும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், பாதுகாப்பு நடவடிக்கை களுக்கு ஆயிரக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப் படவுள்ளதாக தேர்தல்களுக்குப் பொறுப் பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்துள்ளார்.
சிறு சிறு சம்பவங்கள் நடந்திருந்தாலும் நிலைமை சுமுகமாக இருக்கிறது. என்றாலும், பாதுகாப்பு பலமாகவே இருக்கிறது; பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டி ருப்பதாகவும் காமினி நவரட்ன கூறினார்.
தேர்தல் நடைபெறும் உள்ளூராட்சி சபைகளின் விபரம் வருமாறு:

கொழும்பு மாவட்டம்
1. கடுவல மா.ந.ச
2. கெஸ்பாவ ந.ச
3. ஹோமாகம பி.ச
கம்பஹா மாவட்டம்
4. மினுவாங்கொட ந.ச
5. அத்தனகல்ல பி.ச
களுத்துறை மாவட்டம்
6. அகலவத்தை பி.ச
கண்டி மாவட்டம்
7. ஹரிஸ்பத்துவ பி.ச
8. அக்குரண பி.ச
9. யட்டிநுவர பி.ச
மாத்தளை மாவட்டம்
10. வெலிகமுவ பி.ச
11. உக்வெல்ல பி.ச
நுவரெலியா மாவட்டம்
12. தலவாக்கலை, லிந்துலை ந.ச
காலி மாவட்டம்
13. எல்பிட்டிய பி.ச
14. பத்தேகம பி.ச
15. அக்மீமன பி.ச
மாத்தறை மாவட்டம்
16. அக்குரஸ்ஸ பி.ச
யாழ்ப்பாண மாவட்டம்
17. வல்வெட்டித்துறை ந.ச
18. பருத்தித்துறை ந.ச
19. சாவகச்சேரி ந.ச
20. காரைநகர் பி.ச
21. ஊர்காவற்துறை பி.ச
22. நெடுந்தீவு பி.ச
23. வேலணை பி.ச
24. வலிகாமம் மேற்கு பி.ச
25. வலிகாமம் வடக்கு பி.ச
26. வலிகாமம் தென்மேற்கு பி.ச
27. வலிகாமம் தெற்கு பி.ச
28. வலிகாமம் கிழக்கு பி.ச
29. வடமராட்சி தென்மேற்கு பி.ச
30. பருத்தித்துறை பி.ச
31. சாவகச்சேரி பி.ச
32. நல்லூர் பி.ச
கிளிநொச்சி மாவட்டம்
33. பச்சிளைபள்ளி பி.ச
34. கராச்சி பி.ச
35. பூநகரி பி.ச
முல்லைத்தீவு மாவட்டம்
36. துணுக்காய் பி.ச
அம்பாறை மாவட்டம்
37. காரைதீவு பி.ச
38. திருக்கோவில் பி.ச
திருகோணமலை மாவட்டம்
39. சேருவில பி.ச
40. கந்தளாய் பி.ச
41. திருகோணமலை பட்டினமும் சூழலும் பி.ச
42. குச்சவெளி பி.ச
குருநாகல் மாவட்டம்
43. கிரிபாவ பி.ச
44. குளியாப்பிட்டிய பி.ச
45. பொல்காவல பி.ச
46. மாவத்தகம பி.ச
புத்தளம் மாவட்டம்
47. சிலாபம் ந.ச
48. நவகத்தேகம பி.ச
49. சிலாபம் பி.ச
50. வென்னப்புவ பி.ச
அநுராதபுரம் மாவட்டம்
51. நுவரகம்பலாத்த மத்தி பி.ச
52. ராஜாங்கனய பி.ச
53. கல்நேவ பி.ச
பொலனறுவை மாவட்டம்
54. எலஹர பி.ச
55. ஹிங்குராக்கொட பி.ச
56. வெலிகந்தை பி.ச
மொனராகல மாவட்டம்
57. சியம்பலாண்டுவ பி.ச
58. மொனராகல பி.ச
இரத்தினபுரி மாவட்டம்
59. எம்பிலிபிட்டிய பி.ச
60. இரத்தினபுரி பி.ச
61. பலாங்கொட பி.ச
62. வெலிகெபொல பி.ச
கேகாலை மாவட்டம்
63. கேகாலை ந.ச
64. வரக்காபொல பி.ச
65. ருவான்வெல்ல பி.ச
»»  (மேலும்)

ஈரானில் பறந்த அமெரிக்க உளவு விமானம்

ஈரானில் பறந்த ஆளில்லா அமெரிக்க உளவு விமானத்தை அந்நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் தாக்கி அழித்ததாக அந்நாட்டிற்கான இணையத்தளத்தில் செய்தி வெளி யாகியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு அரசின் இணையத்தளத்தில் ஈரான் அரசியல்வாதியான அலி அகாசாடே கூறியதாக வெளியான செய்தியில் "ஈரானின் மத்தியில் யுரேனிய வளம் நிறைந்த பகுதியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் தாக்கி அழித்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
»»  (மேலும்)

யாழ். குடா: 36 பாடசாலைகளில் புதிய கட்டடங்கள் ஜனாதிபதியால் திறப்பு இலங்கை வரலாற்றில் முதற்தடவை; ஒரு கோடி 30 இலட்சம் ரூபா செலவு

யாழ். குடா நாட்டில் வரலாற்றில் முதற் தடவையாக 36 பாடசாலைகளின் கட்டிடங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டன.
வட மாகாண மக்களின் கல்வித்துறை மேம்பாட்டை கருத்திற் கொண்டு ஒரு கோடி 30 இலட்சம் ரூபா இந்த திட்டத்திற்கென செலவிடப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் ஒரே நேரத்தில் பாடசாலை கட்டிடங்களை திறந்து வைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தென்மராட்சிப் பகுதியில் புதிய வலையக் கல்விப் பணிமனையும் நேற்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை பிரதியமைச்சரினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்திய மைச்சு வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தினூடாக யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பாடசாலைகளுக்குத் தேவையான விஞ்ஞான ஆய்வு கூடம் செயற்பாட்டு அறைகள் சங்கீத மற்றும் நடன மண்டபங்கள் ஆகியவற்றை அமைத்துக் கொடுத்துள்ளன.
யுத்தத்தினால் அழிவடைந்துள்ள பாடசாலைகளை அரசாங்கம் புனர்நிர்மாணம் செய்தும் புதிய கட்டிடங்களை அமைத்தும் வருகின்றது.
யாழ். மாவட்டம் சாவகச்சேரி பகுதியிலுள்ள நான்கு பாடசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நேற்று பல்வேறு கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
சாவகச்சேரி தென்மராட்சிப் பகுதியில் இதுவரைக் காலமும் நிரந்தர கட்டிடமின்றி வாடகை செலுத்தி இயங்கி வந்த கல்விப் பணிமனைக்காக 20 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிடம் நேற்று அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. இதேவேளை, மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் 16 இலட்சம் ரூபா செலவில் செயற்பாட்டறையும் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் ஸ்ரீ பாரதி வித்தியாலயத்தில் இது வரைக்காலமும் இல்லாமலிருந்த விஞ்ஞான ஆய்வு கூடம் 2 கோடி ரூபா செலவில் புதிய கட்டிடமொன்று நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டது.
யுத்தத்தினால் மீளக்குடியேறிய அநேகமான பொது மக்களின் பிள்ளைகள் நாவற்குழி மகா வித்தியாலயத்தில் கல்வி பயில்கின்றனர். இவ் வித்தியாலயத்திற்கு 20 இலட்சம் ரூபா செலவில் விஞ்ஞான ஆய்வு கூடமும் முத்து குமாரசுவாமி வித்தியாலயத்திற்கு செயற்பாட்டறையும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் பிரதியமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்கவி னால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண சபை, பிரதேச சபை ஆகியவற்றின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். யாழ். மாவட்டத்தில் நேற்று ஆரம்பிக்கப் பட்ட இந் நிகழ்வுக்கு அமைச்சர் எஸ். எம். சந்திரசேன பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் ரோஹித்த அபயகுணவர்தன உட்பட மேலும் பல அமைச்சர்கள் இப்பாடசாலைகளை திறந்து வைத்தனர்.
»»  (மேலும்)

மட்டு. அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆரம்பம்

மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று (21) நண்பகல் கொடியேற்றத் துடன் ஆரம்ப மாகியுள்ளது.எதிர்வரும் 29ம் திகதி காலை தேரோட்டமும் 30ம் திகதி நண்பகல் தீர்த் தோற்சவமும் இடம் பெறவுள்ளது.
சீதையை மீட்பதற்கு வந்த இராமன் இங்கு சிவலிங்க பூசை செய்ததாக ஆலய வரலாறு கூறுகின்றது. ஆடி அமாவாசை தினத்தில் தீர்த்தோற்சவம் இடம் பெறும்.
»»  (மேலும்)

சர்வதேசத்தின் தீர்வு நமக்கு தேவையில்லை எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க முடியும்

சர்வதேசத்தின் தீர்வு நமக்குத் தேவையில்லை நமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள முடியும் என பிரதமர் டி.எம். ஜயரட்ன பூநகரியில் தெரிவித்தார்.
தமிழ், சிங்கள மக்கள் தமக்கிடையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் இரு சமூகங்களுக்கிடையிலுள்ள இடைவெளி குறைந்து ஒற்றுமை வலுப்பெறும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
கிளிநொச்சி பூநகரி பகுதிகளில் நேற்று முன்தினம் 20 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர்கள் முக்கியஸ்தர்களுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இப்பேரணிக் கூட்டங்களில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில்;
ஜனாதிபதி சகல இன, மதங்களுக்கும் மதிப்பளிக்கின்றவர். அனைவரும் கெளரவத்துடன் வாழ வேண்டும் என்று விரும்புகின்றவர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடபகுதி அபிவிருத்தியில் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். வடக்கு மக்களின் வாழ்வாதாரமான விவசாய, மீன்பிடி கைத்தொழில் நடவடிக்கைகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கி அவர்களின் மேம்பாட்டுக்கு உந்துதலளிக்கின்றார். இவ்வாறு நாம் செயற்படும் போது உலகிலேயே முன்னணி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும்.
எமது எழுச்சியைத் தடை செய்வதற்கு சில சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும் முயற்சிக்கின்றன. நாம் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியம்.
எமக்கு ஒரு பலமான அரசாங்கம் உள்ளது. பெருமளவிலான பாராளுமன்ற, மாகாண, பிரதேச அதிகாரங்கள் அரசாங்கத்திடமே உள்ளதால் உள்ளூராட்சி சபைகளும் அரசாங்கத்திடம் இருந்தால் உச்ச நன்மையை அடைய முடியும்.
பாராளுமன்றத்தினதும் மாகாண சபைகளினதும் சட்டங்களை அங்கீகரிக்கின்ற பலம் ஜனாதிபதிக்கு உண்டு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

7/21/2011

‘கொட்டியாரம் இலக்கிய மரபு



பாலசுகுமாரின் ‘கொட்டியாரம் இலக்கிய மரபு'நூலறிமுக நிகழ்வும்
பேராசிரியர் சிவத்தம்பி அஞ்சலி நிகழ்வும்
நூல் வெளியீட்டுரை -காசிநாதர் சிவபாலன்
கருத்துரை-தர்மலிங்கம் சர்வேஸ்வரன்
இலங்கையில் ஆவணப்படுத்துகையின் சவால்கள்-என்.சரவணன்
நெறியாள்கை-சஞ்சீவன்
ன்23.07.2011 மாலை 16.30
இடம் - Nordvetbakken 2, 0953 Kalbakken
invitation-bala.jpg
»»  (மேலும்)

7/20/2011

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று  தவிசாளர் எச் எம் எம் பாயிஸ் தலைமையயில் கூடியது.இன்று கூடிய சபையில் அண்மையில் காலஞ் சென்ற மாகாண சபை உறுப்பினர் தேவபெரும அவர்களின் இரங்கல் உரை இடம்பெற்றதோடு. அவரது இழப்பு குறித்து அனுதாப பிரேரணைகளும் முன் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் மற்றும் அமைச்சர்கள் இமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
»»  (மேலும்)

மாவட்ட மட்ட விளையாட்டுப் போடடியில் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் கிரிக்கட் அணி முதலிடம்

இளைஞர் விவகார அமைச்சு முலம் தேசிய இளைஞர் சேவைகள் மண்றமும் தேசிய இளைஞர் கழக சம்மேளனமும் வருடாவருடம் நடாத்தும் இளைஞர் விளையாட்டு விழாவின் 23வது இளைஞர் விளையாட்டுவிழாவில் முதல் முதலாக மட்டக்களப்பு மாவட்டம் மகளீருக்கான கிரிக்கட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
26 மாவட்டங்களாக பிரிக்கப்பப்டு நடாத்தப்பட்ட மகளீருக்கான கிரிக்கட் போட்டியிலேயே மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச மகாஜன இளைஞர் அணி முதலம் இடத்தை பெற்றுள்ளது.
இவர்களுக்கான வரவேற்பு கௌரவ நிகழ்வு மாகானப்பணிப்பாளர் கே.தவராஜா தலைமையில் நடைபெற்றது இன் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  பூ.பிரசாந்தன் கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகான முதலமைச்சரின் பணிப்பின்பேரில் ஞபகார்த்த சின்னங்களும் வழங்கிவைத்தார் மகாஜனக்கல்லூரியின் அதிபர்   திருமதி கனகசிங்கம் மாவட்ட உதவிப்பணிப்பாளர் கவூர்  மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி இளைஞர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கெண்டனர்.
»»  (மேலும்)

7/19/2011

50 இலட்சம் ரூபாய் செலவில் இருதயபுரம் பாலர் பாடசாலை நிர்மானம்.

மட்டக்களப்பு இருதயபுரம் இருதயநாதர் தேவாலயத்தின் பாலர் பாடசாலை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்படவுள்ளது, இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (17.07.2011) இருதயபுர இருதயநாதர் தேவாலையத்தின் அருட்தந்தை ஆர்.திருச்செல்வம் அவர்களின்; தமையில் இடம் பெற்றது. கிழக்கு முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாலர் பாடசாலைக்கான அடிக்கல்லை நட்டு வைத்தார். இதற்காக சுமார் 5மில்லியன் ரூபாய் நிதியினை முதல்வார் சி.சந்திரகாந்தன் ஒதுக்கீடு செய்துள்ளார். இந் நிகழ்வில் பூ.பிரசாந்தன், திருமலை மட்டு மறைமாவட்ட ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, சகோதரி மேரி ஆன் மனுவல் மற்றும் மட்டு மாநகர பிரதி மேயர் ஜோர்ச் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

»»  (மேலும்)

உறவுகளைத் தேடுகிறார் ஊறுவரிக்கே வன்னியா

இலங்கைத் திருநாட்டின் இதயமாக விளங்கும் ஊவா மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள பிரதேசத்தின் மேற்காக அமைந்துள்ள தம்பானைக் கிராமத்தில் வசிக்கும் ஆதிவாசிகளின் வரலாறு அனைவரின் மனங்களையும் கவரும் சுவாரசியமான அம்சங்கொண்டது.
இவர்களின் பாரம்பரியத்தின் ஆரம்ப சரித்திரம் வரலாற்றுக் கதைகளிலும், பூர்வீக விவரணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் வசித்த இயக்கர் கோத்திரத்தைச் சேர்ந்த குவெனி என்னும் பெண்ணோடு இந்நாட்டுக்கு வருகை தந்த விஜயன் என்னும் அரச குமாரன் செய்து கொண்ட விவாகத்தின் பலனாக அவர்களின் சந்ததியின் மூலம் இப்பாரம்பரியம் ஆரம்பமானதாக சொல்லப்பட்டாலும், தொல்பொருள் சம்பந்தப்பட்ட தகவல்களின்படி மேற்குறிப்பிட்ட பாரம்பரியம் இலட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பலாங்கொடை மனித பாரம்பரியத்தோடு தொடர்புடையதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உண்மையாகின்றது.
பெரும் வேடர்களின் ஊராக கருதப்படும் விந்தனை போன்று அனுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்தில் வாகரை, பனிச்சங்கேணி, பால்சேனை, வெருகல் போன்ற கரையோரப் பிரதேசங்களிலும் வேடுவர்கள் வாழ்ந்த வரலாறுகளும் சான்று பகர்கின்றன.
இப்பொழுதும் தம்பானை, சோனிகலை, திபுலாகலை, ரதுகலை, பெல்லேபெத்த, வாகரை, மட்டக்களப்பு பிரதேசங்களிலும் இவர்களின் குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. ஓர் எளிய வாழ்வு முறைக்கு உரிமைகோரும் இவ்வேடர்களின் மொழி மிகவும் சுவையானது.
ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வசனக் கோவைக்கு உள்ளடக்கிய இம்மொழி அவர்களுக்குரித்தான ஒரு மொழியாகும். தன்னையும் அதேபோல் மற்றவர்களையும் அழைக்கும்போது முதற் பெயருடன் ‘அத்தே’ எனும் கெளரவத்தையளிக்கும் சொல்லை உபயோகிப்பது விஷேடத்தன்மையாகும்.
பின்வரும் வேடுவமொழியும் அதன் தமிழ் அர்த்தங்களும்,
யானை - பொடகதா
முயல் - பொக்கி
மரை - கங்குனா
தண்ணீர் - தியராச்சா
பறவை - வப்பி
தாய் - அம்மி லாத்தோ
தகப்பன் - அப்பி லாத்தோ
சோறு - தெபட்டுள்ளான் தென
இவ்வாறு வாழும் இவர்களிடம் மிகவும் இறை பற்றுதலும் உண்டு. இயக்கர் குலத்தைச் சேர்ந்த இப்பாரம்பரியம் தமது இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வது வனாந்திரங்களோடு மட்டுமல்ல மலைக்குன்றுகள், சோலைகள், கற்கள், விருட்சங்கள் ஆகியவற்றை ஆட்கொண்ட மஹா ஆயுள்பலம் கொண்ட பேய்கள், (வேதாளங்கள்) உடனாகும்.
தனது பரம்பரையை சேர்ந்தவர்கள் இறப்புக்குப் பிறகு அவர்கள் பேய்களாக நடமாடுவதாக (தமது தெய்வங்களாக) சந்தேகமின்றி நம்புகின்றார்கள்.

முன்னைய தலைவர் திசாஹாமி

இவ்வாறு கூறப்படும் பேய்களுள் கந்தே முல்பொலவன்னியா, களுபண்டார தெய்வம், இதிகொல்லைப் பேய்கள், எல்லை சார்ந்த பேய்கள், கற்களைச் சார்ந்த பேய்கள், பிரதானவைகளாகும். பேய்கள், வேதாளங்கள், தெய்வங்கள் இராட்சதங்கள், நாச்சிமார்கள், கிரிஅம்மாக்கள் என பூஜிக்கப்படுபவை இறந்து போன ஆத்மாக்களாகும்.
முன்பு பூரணமான வேட்டையில் ஈடுபட்டிருந்த ஓர் இனமாக இவர்கள் இருந்தனர். இயற்கைச் சூழலுக்கு அடிபணிந்தவர்களாக அதை விரும்பியவர்களாகவும் இவர்களைக் காணமுடியும்.
அம்பு, ஈட்டி மூலம் மிருகங்களை வேட்டையாடுவது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே ஆகும். ஆயினும் ஊனமுற்ற, கர்ப்பமாகிய மிருகங்களையோ, தண்ணீர் அருந்தும் அல்லது புல் தின்னும் மிருகங்களையோ, அதன் குட்டிகளையோ ஒருபோதும் வேட்டையாடவில்லை. வேட்டையாட அனுமதிப்பதும் இல்லை.
தம் இனத்தைச் சேர்ந்த இறந்தவர்களுக்கு நேர்த்தியாக கொல்லப்படும் மிருகங்களின் சுட்ட இறைச்சியை, காயவைத்த இறைச்சியை கொண்டு பூஜை செய்தபின் ஆசனபங்கு, வைத்தியர் பங்கு, தலைவர் பங்கு என (இறைச்சி) வெவ்வேறாக பிரிக்கப்பட்டு அவைகளை கிராமத்திற்கு கொண்டுபோய் பிரித்துக்கொடுத்தும் அளவுக்கு அவர்கள் உலோபித்தனம் அற்றவர்களாக இருந்தார்கள்.
இவர்களுக்கு மிகவும் பிடித்த சுவையான உணவு தேனில் இடப்பட்ட வேட்டையாடிய இறைச்சியாகும். தேன் போலவே குளவித்தேனும் வேடுவர் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட மிகச் சுவையான போசணை மிகுந்த ஓர் மருத்துவ குணம் கொண்ட உணவாகும். இவர்களின் மிக விருப்பமான உணவாகக் கருதப்படும் இது இறைச்சிபோல் வேறு சில கனி வகைகளைப் பதனிட்டு வைத்துக் கொள்வதற்கு உபயோகப்படும். தேன் எடுக்கச் செல்வது ‘பெனி பெதியாமய்’ செல்லும் நேரம் ஆகும். ‘அனுதடயாமய’ பயணம் குளவிகள் சென்ற பாதையில் செல்வதாகும்.
காவிய இலக்கியம் இவர்களுக்கான ஓர் தனி இடத்தைத் தருகிறது. வேட்டை கீதம், காதல் கீதம், சோககீதம், கொலு கீதம் என வகைப்படுத்த முடியும். தனியே அல்லது ஜோடியாக பாடப்படும் இக்கீதங்களில் ததனத தந்தன ததினானே தெனதெதினானே தெதினானே’ என்னும் தாளங்கள் பாவிக்கப்படுவது வழமையாகும். கற்குகைகளில் உருவங்களின் மூலம் எழுத்துக்கள் குறிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள வசனப் பிரயோக கீத இலக்கியத்தை நோய்க்கு பரிகாரமாக வழங்க அனுகூலமாக இருந்தார்கள் என்பதனை ஊகிக்க முடிகின்றது.
இவ்வாறான காடுகளையும் மேடுகளையும் அனுபவ வாயிலாகக் கற்றுணர்ந்த மூதாதை வேடுவர்களின் தலைவரான ஊருவரிக்கே வன்னிய (லெத்தோ) தமது உறவுகளைத் தேடிச் சேர்க்கும் பணி பற்றியும் விவரித்தார். தம்மையும் தமது இனத்தினையும் பற்றி இத்தாலிய தேசத்தில் அல்பெங்கா நூலகத்தில் ‘வேடர்கள்’ என்ற புத்தகத்தைப் படித்து அறிந்து பின்னர் எம்மைத் தேடிவந்து எம்முடன் நீண்டகாலமாக வாழ்ந்து தமது திருமணத்தையும் எமது கானகத்தில் நடாத்தியவர் தான் இத்தாலியரான கொரிசியோ கொருடிரோ என்பவராவார்.
இந்நிலையில் அவரது துணைவியாரது அன்பான வழிகாட்டுதல் இம்மிங்டில்பினே என்பதும் அவரது துணைவர்களதும் இணைந்து எமது இனத்தவர்களைத் தேடும் பணியில் பயணிக்கும்போது ஆலங்குளம் பாடசாலை அதிபராக இருந்த இரமேஷ் கலைச் செல்வன் என்பவரைச் சந்தித்தோம்.
அப்போது எம் உறவுகள் பற்றிய தகவல்களைப் பெற்றோம். அதனூடாக புதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வேடுவத் தலைவர் தெரிவித்தார்.
நடந்து முடிந்த யுத்தத்தின் பின்னர் தமது உறவுகளைத் தேடிச் சேர்க்கும் நடவடிக்கையின் ஒரு படியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கறளின் ஆசிர்வாதம் பெற்றோம். அவரது ஆலோசணைகளுக்குத் தலைவணங்கி அவ்வழி செயற்பட்டு எம்மக்களை ஒன்றிணைத்து புதியதோர் அத்தியாயத்தில் கால் பதிக்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாக வேடுவத் தலைவர் கூறினார். இது தொடர்பான மாநாடு எதிர்வரும் 30, 31 திகதிகளில் வாகரையில் ஜனாதிபதியின் பங்கேற்புடன் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

»»  (மேலும்)

7/18/2011

தமிழரின் பாரம்பரிய கலை வடிவமான வசந்தன் கூத்து பாதுகாக்கப்பட வேண்டும்

 கந்தப்பன் சூரியகுமார்
கிழக்கு பல்கலைக்கழகம்  
 தமிழரின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான வசந்தன் கூத்து இன்று அருகிக்கொண்டு வருகின்ற நிலை யிலே அதனைப் பற்றிய ஆய்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படு கின்றது. இந்த வசந்தன் கூத்தானது. அழகியல் உணர்வினைக் கொண்டமைவ தோடு சிறுவர்களுடைய அரங்கச் செயற் பாடாகவும் பாமர மக்களிடையே பயிலப் பட்டு வருகின்ற ஒன்றாக இருக் கின்ற வேளையிலும் அவை ஓர் அழகு சார் கிராமிய கலை என்பதில் வியப்பில்லை.
ஈழத்து தமிழ் பாரம்பரியத்திலே தமிழருக்கு என தனியான கலைகளை வைத்திருக்கின்ற கலைகளில் இதுவும் பிரச்சித்தமானதாக பல்வேறு பிரதேசங் களிலும் ஆடப்பட்டு வந்தாலும் இவற் றின் சிறப்பான தன்மையை மட்டக் களப்பு பிரதேசத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. இவற்றிலே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தேத்தாத்தீவு என் னும் கிராமத்தில் ஆடப்பட்டு வரும் வசந்தன் கூத்தின் ஆற்றுகையினை அடிப்படையாகக் கொண்டே இக்கட்டுரையினை எழுதுகிறேன்.
இங்கு வசந்தன் ஆடப்பட்டு வருவ தோடு இதற்கென ஓர் பரம்பரையே இருந்து செயற்பட்டு வருகின்றமையி னைக் காணலாம். இவர்கள் வசந்தன் என்பதற்கு பல்வேறு வரைவிலக்கணங் களை கொடுத்திருப்பதனைக் காணலாம்.
வசந்த காலத்தில் ஆடியதால் வசந்தன் கூத்து எனவும் சிறுபிள்ளைகளை வசந்தன் பிள்ளைகள் எனவும் இவ்வா றான பிள்ளைகளால் ஆடப்படுவதால் வசந்தன் கூத்து வசந்த மகாராசனின் மனைவியை மகிழ்விப்பதற்காக ஆடிய தால், கூறுவதோடு இவ் ஆற்றுகை கண்ணகியின் கோபம் தணிக்க வசந்தன் பிள்ளைகள் கோல்கொண்டு ஆடியதால் வசந்தன் எனவும் பெயர் வந்ததென ஓர் விமய சார்பான கதை யும் இருப்பதாகவும் வசந்தனை விளக் கும் இவர்களின் இக் கலைவடிவ மானது முழுக்க முழுக்க சிறுவர்களின் ஆற்றுகையாகவே இடம்பெறுவதனை இதன் அறிக்கையில் இருந்து காணலாம்.
இவ் வசந்தன் ஓர் பருவகால செயற்பாடாகவே மேற்கொள்ளப்படு கின்றது. இந்த வசந்தன் ஆற்றுகை வைகாசி மாதம் இடம்பெறுகின்ற கண்ணகை அம்மன் ஆலய நேர்த்திக் கடனுக்காக ஆடப்படுவதனால் தை, மாசி, பங்குனி காலப்பகுதியில் சிறுவர்களை அழைத்து அவர்களுக்கு வசந்தன் பழக்கப்பட்ட ஆயத்தமாகும்.
இந்த வேளையில் சிறுவர் மாத்திர மின்றி ஊரிலுள்ள பெரியவர்களும் அழைக்கப்பட்டு அண்ணாவியாரால் வசந்தன் ஆடப்படப் போகிறது என அனைவரினதும் முன்னிலையில் கூறப்படுகின்ற வேளை அனைவராலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டு, எத்தனை சிறார்களைக் கொண்டு ஆடுவது யார் யாரைத் தெரிவு செய்வது என்பது சிறார்களின் எண்ணிக்கையிலிருந்து தேர்வு இடம்பெறும்.
அன்று சிறுவர் களும் பெரியவர்களுடன் அமைதியாக மர நிழலில் அமர்ந்திருந்து அண்ணா வியார் குழாமும் தேர்வில் ஈடுபட்டு சிறார்களை அளவு பிரமாணங்களுக் கேற்ப தெரிவு செய்து விடுவார்கள். அன்றைய தினம் சிறார்களின் மனதில் ஓர் சந்தோசமான நாளாக ஆரம்பிக்கத் தொடங்குகிறது என்றார்.
இவ்வாறு இடம்பெறத் தொடங்கினா லும் சிறார்கள் கல்வி பயிலுகின்றவர் கள் ஆதலால் கூத்து பயிலுகின்ற நேரமும் மாலை நேரமும் ஆதலால் அவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு, கூத்து என பல பிரச்சினைகள் ஏற்படும். பின்னர் அதற்கேற்க நேரமாற்றங்களைச் செய்து முன் வந்து கூத்து செயற்பாட்டில் ஈடுபடுவது அவர்களுக்கு சந்தோசமாக அமையும்.
அது மாத்திரமின்றி அவர்கள் பெரியோர் சொற் கேட்டு அந்த அண்ணாவியார் குழாமுடன் அன்னியோன்னியமாகி எங்கிருந்து தூரச் சொந்தமாக இருக்கும். சிறார்களும் ஓர் குடும்பம் மாதிரி இணைந்து மகிழ்வாக வாழுகின்ற ஓர் நிலை ஏற்படுத்தி சிறுவர்களின் எழுர்ச்சியையும் ஆளுமையையும் வளர்க்கின்ற சூழலை இந்தக் கூத்து ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
சிறுவர்கள் ஆடலைப் பழகுகின்ற வேளையில் அண்ணாவியார் பாடல் களை பாடுவார். அதாவது தரு, விருத்தம் போன்றவற்றினால் கவரப் படுகின்றார்கள். அதனால் ஆடல், கோலங்களை பயில்கின்றார்கள். இதனால் பெரியவர்களால் செய்ய முடியாத துள்ளல், பாய்தல், குந்துமிதி, பொடியடி, வீசரணம், சிறுவட்ப எனப்பல ஆடல் அசைவுகளை பயில்வது அவர்களின் பரண ஆளுமையின் விருத்தியையும் உடல் விருத்தியையும் விருத்தி செய்கின்ற வகையில் அமைவதோடு அவர்களின் சிந்தனைகளின் எழுர்ச்சிகளும் மேலோங்கி உதவி செய்வதாக இந்த வசந்தன் அமைவது மிகவும் முக்கியமானதாக காணலாம்.
அவர்கள் மாத்திரமின்றி ஏனைய பார்வையாளர்களாக இருக்கின்ற சிறுவர்களும் இதனை இரசனை உணர்வோடு கூத்துப் பார்ப்பதற்காக அந்த ஆடல் தொடங்கிய பொழுதே வந்து சேர்கிறார்கள்.
கணினி தொலைக்காட்சி என சிறுவர்களை தன்வசமாக உள்வாங்கி வைத்திருக்கும் இந்தக் காலச் சூழலில் இவ்வாறான சிறுவர் சமூகங்களை இணைத்துக் கொள்வதாக இந்த கூத்து அமைகின் றது. அதில் ஆடப்படும் சிறார்களை யும், பார்வையாளர்களாக இருக்கின்ற சிறுவர்களும் ஓர் இடைவேளை நேரங்களில் இந்த ஊடக வலையில் இருந்து விடுபட்டு ஒன்றாக தாகசாந்தி களில் கலந்து மகிழ்வாக வாழுவது என்பது எல்லாச் சூழலிலும் கிடைக்காதது.
மேலும் இவ்வாறாக செல்கின்ற வேளையிலே சிறுவர்களின் ஒழுக்க விழுமியங்களும், கடமை உணர்வுகளும், பொறுமை என பல்வேறு நலன்களுக்கு இவர்களை விருத்தி செய்யும் களமாகவும் இக் களறியினை முன்னெடுக்கப்படுகின்றது.
அவர்களைக் குறிப்பிட்ட நேரத்திற்கு அழைத்தவுடன் அவர்கள் சேருதல், அண்ணாவியாரின் சொற் கேட்டு நடத்தல் என்பன சிறுவனின் துள்ளல் பருவத்திலும் அவனை அவனே கட்டுப்படுத்தி வாழும் அதிகாரத்தன மற்ற அன்புக்குள் கட்டுப்பட்டு வாழுதல் என்பன சிறுவர்களின் குறு நாள் கலைக்கூட்டமாக களரி விளங்குகின்றது என்பது வசந்தனின் சிறப்பாகவே நாம் பார்க்கலாம்.
அத்தோடு இவ்வாறாகப் பயிலப்பட்டு வரும்போது அவர்களை அரங்கேற்றம் செய்து அதனை ஊருக்குக் காட்ட வேண்டிய நிலை ஏற்படும்போது அதற்கான பூர்வங்க வேளைகளில் அனைவரும் ஈடுபடுவார்கள்.
சிறார்க ளின் பெற்றோர்கள், பொது அமைப்பு க்கள் என இவ் வேலைகளில் கூந்தர் குழாமுடன் இணைந்து செயற்படுபவர். இதில் சிறார்கள் மகிழ்வு உணர்வுடன் இவர்களே இதில் முழு முனைப்புடன் அதற்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபடுவார்கள்.
கூத்துக்கான ஆடைக ளைத் தெரிவு செய்தல் மாலைகள். தலைப்பாகைகள், சதங்கை கூத்துக்கான கம்பினை (கோல்) அலங் கரித்தல் என ஆர்வமாக செயற்படு வார்கள். எப்போது அரங்கேற்றம் என இமை மூடாது செற்படுபவர்களாக இருப்பது அவர்களில் ஊக்கத்தினைக் காட்டுகின்றது.
அரங்கேற்றத்தில் அழைப்பிதழ் கொடுக்கின்ற வேலைகளில் சிறார்களே முன் நின்று செயற்படுவர். அரங்கேற் றத்தில் ஓர் வருடமாக நினைத்து தம் உறவினரின் வருகையை எதிர்பார்க்கும் இந்த சிறார்களுக்குரிய வருடம் அன்று தான் எனும் மகிழ்வுடன் வாழும் நாள் அன்றாகும். ஏனைய கிராமத்தில் இருக்கும் அவர்களது உறவுகளும் இதில் கலந்து மகிழும் நாளாக அன்று இருப்பதோடு அரங்கேற்ற கலரியில் கெளரவிப்புக் கள் எல்லாம் இடம்பெறும்.
இவ்வாறான அரங்கேற்ற நாளில் மக்களின் பலர் கூடுவதால் அந்த இடம் களைகட்டும். அதில் சிறுகடை வியாபாரிகள் தாம் சிறு இலாபமானது பெற வேண்டும்.
எனும் நோக் கோடு சிறுகடைகளைக் கொண்டு வருவதும் அதில் சிறார்களின் உறவினர்கள், ஏனையவர் கள் எனப் பலரும் பொருட்கள் வாங்கி மகிழ்வுடன் இருப்பது ஓர் சந்தோசமாக அமைவதும், அனைவரது மனதினை யும் இன்பத்தில் ஆழ்த்து வதோடு சமூக உறவினை புதுப்பித்தலுடன் ஏனைய கூடத்தாரும் சிறுவர்களின் நண்பர்களும் கண்டுகளி க்க வரும்போது அவர் களுக்கும் தாமும் ஆட வேண்டும் என்ற ஆசை யும் ஊட்டுவதோடு ஏதோ ஒரு வாதத்தில் அவர்களை யும் அந்த உணவர்வுக்குள் கொண்டு சென்றுவிடுகின்றது. இவ்வாறாக அவர்களும் பாடசாலை கள் போன்ற இடங்களில் பயின்று வருவது இந்த கிராமிய கலையினை வளர்க்கின்றதாக அமையும்.
இவ்வாறாக அரங்கேற்றப்பட்டு கோயில்களில் ஆடுவதற்காக செல்லுகின்ற வேளைகளில் சிறுவர்கள் ஏதோடு ஓர் புது இடங்களுக்கு நாம் கூத்தினை ஆட போகின்றோமே என்கின்ற எண்ணத்தினால் மேலும் கூத்தில் ஈடுபடல் நேரத்திற்கு தயாராதல் என்பன தங்களைத் தாங்கள் அறியாமலே அவர்களுக்குள் சேர்வதும் அவர்களின் பெற்றோருக்கு சிறுவர்களின் நலனுக்காக உதவ வேண்டும் எனும் எண்ணமும் மேலோங்கும் அளவிற்கு சிறுவர்கள் இவற்றில் முனைப்புடன் செயல்பட அவர்களின் வயது, மனநிலை போன்றன உறுதுணை செய்கின்றது.
மேலும் இவ்வாறான இடங்களில் கூத்து ஆடச் செல்லும் வேளையில் விருத்தங்கள், தாளிசைகள் பாடுவதற்காக சிறார்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படும்போது அவர்கள் முனைவது என்பது அவர்களை கல்வித் துறையில் முன்நோக்கி செல்கின்ற நிலைகளுக்கும் வழியமைக்கின்ற வகையிலும் கூத்து விளங்குகின்றது எனலாம்.
இவர்கள் வயதுடையவர்களுடன் கோயில் போன்ற இடங்களுக்கு அவர்களின் கட்டுப்பாட்டுடன் செல்வது போன்றனவும் பணிவு போன்றவற்றினையும் வளர்ப்பதுடன் கலைஞர்களின் பணிவுகள் போன்றனவும் சிறார்களைச் சார்கின்றது. அத்தோடு நேர்த்தி அழகியல் போன்றன சிறார்களை சார்கின்றது என்பதும் கூத்தின் அறிவூட்டல் என்றே கூறலாம்.
இவ்வாறான சின்னஞ் சிறார்களினால் வெளிப்படுத்தப்படும் கோல்கொண்டு ஆடும் வசந்தனூடாக சில சிறார்கள் நற்பழக்கம் மற்றும் பொறுமை, விட்டுக் கொடுப்பு, ஞாபக சக்தி, கற்பனைத் திறன் எனப் பல்வேறு விடயங்களுடன் வசந்தன் பற்றிய அறிவு, வரலாற்றுக் கதைகள், கிராமியக் கதைகள், தொழில்சார் கதைகள் எனப் பல்வேறு அறிவுகளை இவ் அத்தியாயத்திலே பெற்றுக்கொள் கின்றார்கள்.
எனினும் இக் கலையினை சிலர் துஷ்பிரயோகம் செய்து இதன் பழமையினை இல்லாமல் செய்திருப் பதும் வேதனைக்குரிய விடயமாகும். இக் கலையினை சிதைவுறாது பாதுகாத்து வளர்ப்பதோடு இவ்வாறான சிறுவர் அரங்கச் செயற்பாடான இக்கூத்துக் கலையினை இன்றைய சமுதாயத்தில் சிறுவர்களிடையே சிறு வயதிலே தனித்திருந்து போட்டி, குரோதம், ஒருவரை ஒருவர் வீழ்த்துதல், தான் முந்த வேண்டும் என்ற கணினி மயமான இக்கால கட்டத்திலும் இவ்வாறான ஓர் அரங்கச் செயற்பாட்டினூடாக சிறுவர்களைப் பெரியவர்களுடனும் கூடிச் செயற்படுகின்ற தன்மையினைக் இக் கூத்தானது ஏற்படுத்தியிருக்கிற தோடு இதனால் இச்சிறுவர் அரங்கு உளவியல் மற்றும் உடலில் விருத்தி போன்றனவும் உருவாவதற்கு இவ்வர ங்கச் செயற்பாடானது உதவுகின்றது.
வசந்தன் கூத்து சிறுவர்களை ஒன்றிணைத்து சிறுவர்களின் கற்றல் மகிழ்விப்பு சிறுவர் அரங்கப் பண்புகளை முன்னெடுத்து செல்கின்ற ஓர் கல்வி ஊடகமாக இவ் அரங்கச் செயற்பாட்டினைக் காணலாம்.
இதற்கும் மேலாக இவ் ஆட்டத்தினை பார்க்கின்ற சிறுவர்களிடையே தாமும் முன் வந்து இவ்வாறு செயற்படக் கூடிய ஓர் ஆர்வத்தினையும் வளர்த்தெடுப்பதனையும் இதனூடாக கோயிலில் ஓடுதல், கடை பார்த்தல் என்கின்றதற்கும் அப்பால் இவ்வாற்றுகைகள் இடம்பெறுகின்ற வேளைகளில் ஏனைய சிறுவர்களை இவ்வாற்றுகை ஒரு வகையில் கவர்ந்து கொண்டு அவர்களையும் ஒரு வகையில் முனைப்புடையதாக, வளமானவர்களாக ஓர் கவர்ச்சியினைக் கொடுத்து ஒருவகையில் அவர்களையும் ஆடுதல்,பாடுதல் என்கின்ற ஓர் செயற்பாட்டுக்குள் கொண்டு செல்வதனை எமது சிறார்களின் ஊடாக அவதானிக்கக் கூடியதாய் இருக்கின்றது.
எனவே இவ் ஆற்றுகையானது ஓர் சிறுவர் அரங்கச் செயற்பாடே என்பதற்கு எந்தவித ஐயமும் இல்லை. இதில் இடம்பெறுகின்ற தெரிவு, பயிற்சியளித்தல், தாமாக ஒன்றை மனனம் செய்துகொள்ளல், தெரிவுகளின்படி ஒத்திகைகள், அரங்கேற்றம் எனப் பல்வேறு அரங்கிற்குரிய செயற்பாடுகளை சிறுவர்களின் தன்மையில் பார்க்கக்கூடியதாய் இருக்கின்றது.
இந்த நிலையில் தாமாகவே தாம் சிறுவர்கள் என நினையாது தாம் ஓர் ஆற்றுகையைச் செய்கின்றோம் என முனைப்புடன் செயற்படும் இச்சிறார்களின் பிஞ்சி உள்ளங்களில் இக்கூத்து முயற்சியினை ஓர் சிறுவர் அரங்காக காணுகின்றோம். இது ஓர் சிறுவர் அரங்கச் செயற்பாடே எனலாம்.
எனவே இக்கலையினை ஏனைய சிறார்களுக்கும் தலைமுறை தலைமுறையாக கையளித்து அவர்களில் ஆடல், பாடல், மகிழ்விப்பு, ஒப்பனை, வினோதம் பயிற்சி என உளவியல் செயற்பாடுகளோடு உடலியல் விருத்திக்கும் ஒத்தாசை வழங்குகின்றது. எனவே இதனை வளர்த்து கிராமிய மண் வாசனையுடன் செழுமை பெறச் செய்து என்றும் வாழும் கலையாக மாற்றி சிறுவர் அரங்கினை வளம் பெறச் செய்வது எமது அனைவரினதும் தலையாய கடமையாகும்.
»»  (மேலும்)