இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஆசிரியர் இடமாற்றம் நிறுத்தப்படவேண்டும் என பலர் குறிப்பிடுகின்றார்களே இது தொடர்பில் உமது கருத்து என்ன என கேட்டபோது:
கிழக்கு மாகாணத்திலே ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 20000ஆயிரத்திற்கு மேலாக இருக்கிறார்கள். அதிலே தற்போது இடம்பெறுகின்ற இடமாற்றத்திலே வெறுமனே 500 தொடக்கம் 600 க்கு இடைப்பட்ட ஆசிரியர்களே வெளி வலயங்களுக்கு இடமாற்றம் பெறு;றுச் செல்கின்றார்கள். இதனால் கல்வியில் பாரிய இழப்புக்கள் எதுவும் ஏற்படப்போவது இல்லை. மேலும் இடம்பெறுகின்ற இடமாற்றமானது வலயங்களுக்கு உள்ளேயான இடமாற்றம் மற்றும் வலயங்களுக்கு வெளியேயான இடமாற்றம். இவை இரண்டுமே கட்டாயம் செய்யப்படவேண்டியவைகள்தான். ஏனெனில் கிழக்கு மாகாணத்திலே ஆசிரியர் சமப்படுத்தல் என்பது கட்டாயம் தேவை இதனை ஜனாதிபதிக்கும் தெளிவுபடுத்தியிருந்தோம் அவரும் அதனை ஏற்றுக் கொணடிருந்தார்.

கிழக்கு மாகாணத்தின் ஒட்டு மொத்த கல்வி அபிவிருத்தி பற்றி சிந்திப்பவர்கள் இதனை இடை நிறுத்த போராடமாட்டார்கள். மாறாக குறுகிய இலாப நோக்கம் கருதி செயற்படுகின்றவர்களே இதனை இடைநிறுத்த கோருகிறார்கள். எனவே முதலமைச்சர் என்ற வகையில் மேற்படி இடமாற்றம் கட்டாயம் இடம்பெற வேண்டும். அதிலே ஆசிரியர்களுக்கு ஏதாவது அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அல்லது குறிதத் ஆசிரியர் ஒருவரது இடமாற்றத்தினால் குறித்த பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் என கருதும் பட்சத்தில் அதுவும் பரிசீலிக்கப்படும். மேற்படி தொடர்பான விடங்கள் குறித்து மேன்முறையீடு செய்யலாம். குறித் மேன்முறையீட்டை நேரடியாக எனக்கு அல்லது கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கலாம் என முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மேற்படி இடமாற்றத்தினை இடைநிறுத்த வேண்டும் என்பதில் ஒருசில அரசியல் தலையீடுகளும் இருக்கின்றது. எது எவ்வாறு இருப்பினும் கிழக்கு மகாணத்தின் ஒட்டுமொத்த கல்வியும் வளர்ச்சி பெற வேண்டும். அதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியம். அதற்கான சமப்படுத்தலேதான் குறிப்பிட்ட ஆசிரியர் இடமாற்றமாகும் என அவர் தெரிவித்தார்.
ஊடகங்களிலே அது தொடர்பில் எந்த விளக்கமுமில்லாமல் செய்திகளை வெளியிடுகின்ற அரசியல்வாதிகளும் சற்று சிந்திக்க வேண்டும். வெறுமனே செய்திகள் வரவேண்டும் என்பதற்காக கருத்துச் சொல்லக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று(16.06.2011) தினசரி பத்திரிகையிலே மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி. முரளிதரன் குறித்த ஆசிரியர் இடமாற்றம் நிறுத்தப்படும் தான் ஜனாதிபதியுடன் பேசியதாகவும் தெரிவித்துள்ளாரே அது தொடர்பில் உங்கள் கருத்து:
உண்மையில் நான் அவருக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். அதாவது ஆசிரியர் இடமாற்றம் என்றால் என்ன? ஏன் செய்யப்படுகின்றது. என்பதனை அவர் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த ஆசிரியர் இடமாற்றத்தினால் உயர்தர மாணவர்கள் பாதிக்கபட மாட்டார்கள் காரணம் எதிர்வரும் ஆகஸ்ட மாதம் பரீட்சை நடைபெறப்போகிறது பெரும்பாலான பாடசாலைகயில் பாடத்திட்டம் முடிவடைந்து விட்டது. மீளக்கற்றல் பணிதான் தற்போது இடம் பெறுகிறது. எனவே இந்த இடமாற்றத்தினை உயர்தரப் பரீட்சை நடைபெறும் வரை ஒத்தி வைக்க வேண்டும் என பிரதி அமைச்சர் கேட்டதாக செய்தி வெளிவந்திருக்கிறது அதற்காகக அவருக்கு இதனைச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
அடுத்தது உண்மையில் மேற்படி இடமாற்றத்தில் ஏதாவது மாற்றம் செய்வதாக ஜனாதிபதி விரும்பினால் மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் என்னிடம் அல்லது ஆளுணர் அவர்களிடம் தெரிவித்திருப்பார். அவ்வாறான எந்தவொரு அறிவித்தலும் இதுவரை எழுத்துமூலமோ அல்லது தொலைபேசிவாயிலாகவோ வரவில்லை. அதனைவிடுத்து பிரதி அமைச்சரிடம் ஜனாதிபதி தெரிவிக் வேண்டிய அவசியம் இல்லை எனவே அவரது கருத்து முற்றிலும் பொய்யானது என நான் குறிப்பிடுகின்றேன். எது எவ்வாறு இருப்பினும் யாரும் குழம்பத் தேவையில்லை குறிப்பிட்டதைப் போன்று ஆசிரியர் இடமாற்றம் இடம்பெறும் நான் ஏலவே குறிப்பிட்டதைப் போன்று யாருக்காவது அநீதி இழைக்கப்பட்டிருந்தால் மேன்முறையீடு செய்து தங்களுக்குhன நியாயங்களை கற்பித்து நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.

0 commentaires :
Post a Comment