6/29/2011

கடாபி மீதான ஐ.சி.சி பிடியாணையை நிராகரித்தது லிபிய அரசு நேட்டோவின் திட்டத்தை செயற்படுத்துவதாக ஐ. சி. சி. மீது குற்றச்சாட்டு

லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி, அவரது மகன் சயிப் அல் இஸ்லாம் மற்றும் உளவுப் பிரிவு தலைவர் அப்துல்லா அல் சனூசி ஆகியோர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ. சி. சி) விடுத்துள்ள பிடியாணையை லிபிய அரசு நிராகரித்துள்ளது.

லிபிய நீதி அமைச்சர் மொஹம்மட் அல் கமுதி மற்றும் லிபிய அரச பேச்சாளர் ஆகியோர் திரிபோலியில் ஊடகவியலாளர் மாநாட்டில் பங்பேற்றுள்ளனர்.

ஐரோப்பிய வெளிநாட்டு கொள்கையை செயற்படுத்தும் வேலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளதாக லிபிய நீதி அமைச்சர் மொஹம்மட் அல் கமுதி தெரிவித்தார்.
லிபியாவில் மனிதாபிமானத்திற்கு எதிராக செயற்பட்டது மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களை கொலைசெய்ய உத்தரவிட்ட குற்றத்திற்காக ஐ. சி. சி. லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி, அவரது மகன் மற்றும் அந்நாட்டு உளவுப்பிரிவுத் தலைவர் ஆகியோருக்கு நேற்று முன்தினம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. லிபியா மீது நேட்டோ தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு சரியாக 100 ஆவது நாளில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்நிலையில் ஐ. சி. சி. யின் பிடியாணை உத்தரவை லிபிய அரசு நிராகரித்துள்ளது. லிபியாவின் நீதியமைச்சர் மொஹம்மட் அல் கமுதி திரிபோலியில் நேற்று முன்தினம் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன் போது அவர் கூறியதாவது, "முஅம்மர் கடாபி மீதான பிடியாணை அரசியல் நோக்கத்திற்காக பிறப்பிக்கப்பட்டது.
இது கடாபியை கொல்லும் நேட்டோவின் முயற்சிக்கு உறுதுணையாக உள்ளது. ஐ. சி. சி. ஐரோப்பிய நாடுகளின் வெளிவிவார கொள்கைகளை நிறைவேற்றும் அமைப்பாகவே உள்ளது. எனவே, அது அரசியல் நீதிமன்றமாக தனக்கு சம்பளம் தரும் ஐரோப்பாவை பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
எமது நாட்டு நீதிமன்றங்கள் மனித உரிமை விவகாரம் குறித்த விசாரணை நடத்தும்" என்றார்.
எனினும் கடாபி மீதான குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை மூலமே நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் ஐ. சி. சி. நீதிபதி சன்ஜிமி மசெனொனோ மெனகங் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடாபி மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து லிபியா வின் கிளர்ச்சிப்படை தலைமையகமான பெங்காசியில் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் அல் ஜெkரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
பெங்காசியில் மக்கள் பட்டாசு கொளுத்தி கடாபியின் பிடியாணை உத்தரவுச் செய்தியைக் கொண்டாடியதாகவும், கிளர்ச்சிப்படையினர் வானத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு தமது மகிழ்ச்சியைத் தெரிவித்ததாகவும் அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியில் உள்ள நாட்டுத் தலைவர் ஒருவருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பது இது இரண்டாவது தடவையாகும். இதற்கு முன்னர் கடந்த 2009 ஆம் ஆண்டு சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பiர் மீது பிடியாணை பிடிப்பித்தது.
எனினும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் அவரை கைது செய்ய முடியாத நிலை உள்ளது. ஐ. சி. சி. பிடியாணைக்குப் பின் கட்டார், சாட் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஒமர் அல் பஷிர் தற்போது நான்கு நாள் விஜயமாக சீனா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 commentaires :

Post a Comment