6/11/2011

பிரத்தியேக வகுப்புக்களை நெறிப்படுத்தல் திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பாக பெற்றோர்களாலும் கல்விமன்களாலும்  கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கவனத்திற்கொண்டுவரப்பட்ட விடயங்கள் தொடர்பாக இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் வாசஸ்தலத்தில் ஆராயப்பட்டது. இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சத்தியநாதன் குணலிங்கம், மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், மாநகர ஆணையாளர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கலாவதி பத்மராஜா, மண்முனை வடக்கு பிரத்தியேகச் சாலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் தீர்மானங்களாக
1.   ஞாயிறு விடுமுறை தினங்களில் மார்க்க கல்விகளை மாணவர்கள் பயில்வதற்காக பி.ப 2.00 மணி வரை கல்விப் பொதுத்தராதர சாதாரண மாணவர்கள் உட்பட அதற்கு கீழ்ப்பட்ட வகுப்புக்கள் நடத்துவதில்லை
2.   போயா விடுமுறை தினத்தில் எந்த வித பிரத்தியேக வகுப்புக்களும் நடத்துவதில்லை
3.   இரவு 07.00 மணிக்கு பிற்பாடு பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தப்படுவதில்லை எனவும்
4.   கல்விப் பொதுத்தராதர சாதாரண வகுப்பு மாணவர்களுக்கு 1மணி நேர வகுப்புக் கட்டணமாக 10ஃஸ்ரீ வும், கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்புக்களில் வர்த்தகப்பிரிவு, கலைப்பிரிவு மாணவர்களுக்கு 1மணி நேர வகுப்புக் கட்டணமாக 20ஃஸ்ரீ வும் விஞ்ஞானப்பிரிவு மாணவர்களுக்கு 25ஃஸ்ரீ வும் அறவிடுவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இதனை மேற்பார்வை செய்வதற்கென முதலமைச்சர் பணிமனை, மாநகர சபை, பிரதேச செயலகம், கல்வித் திணைக்களம், பிரத்தியேக கல்விச் சாலை உரிமையாளர் அடங்கலாக 9 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. இக் குழுவினர் மாதா மாதம் கலந்துரையாடல் நடாத்தி பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பான பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வுகாணும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
காலை வேளைகளில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்துவது தொடர்பாக மிக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டதுடன் இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்கும் பொறுப்பு கல்வித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

0 commentaires :

Post a Comment