தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேணி வருவதாக நான் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினேன். ஆனால் தமிழ்ச் செல்வனின் மனைவியையும் பிள்ளைகளையுமே ஜனாதிபதி பேணி வருகிறார் என அஸ்வர் எம்.பி தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், 'நான் நேற்று நாடாளுமன்றத்தில் தவறுதலாக தமிழ்செல்வனின் மனைவி பிள்ளைகள் என்பதற்குப் பதிலாக பிரபாகரன் மனைவி பிள்ளைகள் என்று கூறிவிட்டேன் இதற்காக சபையினரிடம் மன்னிப்பு கோருகின்றேன்" என்றார். _
0 commentaires :
Post a Comment