முதல் முறையாக நான் ஒரு தமிழ் நபருடன் ( யாழ்ப்பான ஜாதிவெறியன்) பணிபுரிகிறேன். இதுவரை நான் அதிகம் தமிழ் நபர்களுடன் வேலை செய்தது மிகக்குறைவு. அதுகும் மிக நன்றாக தமிழ் பேச தெரிந்த ஒரு தமிழ் நபருடன்.
எனது வேலை தரத்தில் ஆள்குறைப்பு நடந்த காரணத்தினால் கடந்த சில மாதங்களாக என் வேலை அச்சக கண்காணிப்பாளராக மாற்றி வேறு ஒரு பகுதிக்கு அனுப்பிவிட்டார்கள். அதுக்கும்
இரவு வேலை. மொத்தம் 12 பெயர் வேலை செய்வோம். எப்பொழுதும் எங்கள் பகுதி கலகலப்பாக இருக்கும். நாங்கள் எல்லோரும் அதிகம் ஒரே வயதை ஒட்டியவர்கள் என்ற காரணமோ என்னவோ. எப்பொழுதும் மெசின்களின் சத்தத்தை விட எங்கள் சத்தம் அதிகமாயே இருக்கும்.
எங்கள் வேலை தரத்தில் அதிகம் agency worker ´s தான் வேலைக்கு வருவார்கள். இவர்களுக்கு சம்ப்பளம் மிக குறைவு வேலை அதிகம் இல்லை என்றால் எந்த நேரத்திலும் வீட்டுக்கு அனுப்பலாம் என்னும் காரணமும் ஓன்று. இவர்களுக்கு ஜேர்மன் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இப்படி agency worker வந்து சேர்ந்தவர் தான் இந்த யாழ்பாணத்து ஜாதிவெறி. என் தலை எழுத்து அது நான் பெருப்பாய் இருக்கும் பகுதிக்கு வந்து சேர்ந்தது. வந்த இரண்டாம்நாளில் இருந்தே என்னை கிண்டல் பண்ணுவதே இந்த காட்டெருமையின் வேலை. அதன் காரணம் எனது பெயர். என்னை மிஸ் பூச்சி சர்மா என்று தான் அழைப்பார்கள். இந்த நபர் என்னை காணும் போது எல்லாம் நீங்கள் கரப்பொத்தான் பூச்சியா இல்லை புள்ளை பூச்சியா என்று தொல்லை பண்ணி கொண்டே இருப்பார். பொதுவாக வேலை நேரத்தில் யாருடனும் நான் கத்துவதில்லை. அதுக்கும் புதுசாக ஓன்று இரண்டு நாள் பணிபுரிபவர்களுடன் அதிகம் பேசுவதுகூட இல்லை. இவர் இப்படி அழைக்கும் பொழுது எல்லாம் ஒரு சிரிப்புடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவேன்.
அப்படி தான் இந்த நபர் பூச்சி பூச்சி என்னும் போது எல்லாம் சிரிப்போடு போய்விடுவேன். இந்த நபர் வேலைக்கு வந்த நாள் தொட்டு தமிழில தான் பேசுவார். நான் ஒன்றும் சொல்லவில்லை என்றால் சிங்களத்தில் ஏதாவது கேட்கும். அதுக்கும் பதில் குடுக்கவில்லை என்றால் அக்கா மௌனவிரதம் போல எண்ணும். நான் ஜேர்மன், மொழியில் அதிகம் கதைக்காமல் வேலை செய்யுங்கள் என்று விட்டு போய் விடுவேன். இரண்டு நாள் அமைதியா இருக்கும். மூன்றாம் நாள் ஆரம்பிக்கும். வணக்கம் சாப்பிடீங்களா? சத்தியமா தமிழ் தெரியாது? இதே கேள்வியை மூன்று வரமாய் கேட்டு கேட்டு அதுக்கு வாய் வலிச்சுதோ இல்லையோ எனக்கு காது புளிச்சுட்டுது. ஒரு நாள் தெரியும் என்ற சொல்லுடன் போய் விட்டேன். ஆனால் அந்த நபர் என்ன நினைத்தாரோ என்னை காணும் பொழுது எல்லாம் அக்கா சாப்புடீங்களா? அக்கா என்ன சிரிக்க மாட்டன் என்கிறியள் ? நீங்கள் என்ன பூச்சி மிஸ் பூச்சி....? என்று தொல்லை பண்ணி கொண்டே இருக்கும். வேலை செய்யுதோ இல்லையோ என்னை சாகடிச்சுடும் பேசி பேசியே.
அதனால அதை காணுறதையே நான் தவிர்த்து வந்தேன். ஆனால் இன்று மீண்டும் பூச்சி என்று ஆரம்பித்தவுடன் நான் தமிழில் பேசி விட்டு சொன்னேன். என் பெயர் .-
சிராணி செக ஜெனிதா காவேரி செல்வரஜான் பெரியகருப்பன் பூட்ச்சி சர்மா. என் பெயரை அனாவசியமாக சீண்டுவதுக்கு பாவிக்க வேண்டாம். உங்களுக்கு நான் ஒரு அதிகாரி என்பதை மறக்க வேண்டாம் என்று சொன்னேன்.
அந்தாள் வாய் திறக்க நான் நினைத்தேன் மன்னிப்பு கேட்க போகுது ஆக்கும் என்று. ஆனால் அந்த எருமை என்னை கேட்டது தெரியுமா ? நீர் என்ன வடக்கத்தியார் மாதிரி தமிழ் கதைக்கிறீர் பெயரும் அப்படி தான் இருக்கு அப்ப நீர் யாழ்பாணம் இல்லையோ? என்ன கொழுப்பு அது என்ன வேலை செய்யிறது. எத்தினமணிக்கு வீட்டை போகலாம்... தண்ணிகுட்டிக்க போககூட நான் தான் அனுமதிக்க வேணும். அது என்னட்ட கேட்குது நான் வடக்கத்தையாரோ என்று.
அப்பொழுது நான் வார்த்தையை அளந்து வெளியில் விடுங்கள் என்று சொன்ன போது அந்த நபருக்கும் எனக்கும் வார்த்தை போர் முத்தி விட்டது.
என்னை திட்டு திட்டு என்று திட்டிவிட்டு தான் யாழ்பாணத்து வெள்ளாளன் என்றான். அப்புடியா நல்லது ஆனா எனக்கு கீழே கைகட்டி வாய் பொத்தி வேலை பார்க்க வேண்டியது உன் தலை எழுத்து என்று கூறி விட்டு போய் விட்டேன்.
ஆனால் என் அறைதேடி வந்த அந்த ஆளோ என்னை பார்த்து ஆணை மதிக்க தெரியவில்லை. திமிர். இது இந்தியாகரிடம் அதிகம் இருக்கும் ஓன்று. வெள்ளானுக்கு என்ன மதிப்பு என்று தெரியுமோ என்று என்னை திட்டினான். கடைசியில் பொறுக்க முடியாமல் சரி எனக்கு தெரியாது நீங்கள் எந்த இடம் யாழ்பாணத்தில் என்றேன். சங்கானை. ஒ அப்புடியா சங்கானையில பறை ஜாதியும் இருக்குதே நீங்கள் எப்புடி வெள்ளான் என்பதை நான் நம்புது என்றேன். அதன் பின் எதுவும் கதைக்காமல் முறைத்து விட்டு போய் விட்டார்.
இன்னும் மூன்று கிழமைக்கு ஜாதிவெறியன் என்னுடன் தான் வேலை செய்வான். அபொழுது என்ன நடக்குமோ என்பதை விட இந்த ஐரோப்பாவிலும் யாழ்ப்பாண ஜாதி வெறி அதிகரித்து விட்டது என்று எண்ணும் பொழுது கோபம் வருகிறது. இங்கே யாரும் தாழ்த்தபட்ட யாதியை சேர்ந்தவர்கள் இல்லை. எல்லோரும் வெள்ளாளர். கோவியர். ஆனால் திட்டும் போது பறை நாய்.. பல்லன் இப்படி திட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.
இதில் வேடிக்கை என்ன வென்றால் இந்த மேல் ஜாதியினர் வட்டிக்கு பணம் வாங்கினாலும் சரி. பிள்ளைகளில் படிப்பு ஆனாலும் சரி குறைந்த ஜாதியினருக்கு பின்னாலேயே நிக்கிறார்கள். இதை மேல்குலம் அறியவில்லை.
வடக்கத்தையார் என்றால் உங்களுக்கு என்ன இளக்காராமா. நான் பிரமனபரம்ப்பரையில் வந்தவள். நான் இந்தியா வம்சவழியில் வந்ததினால் என் பெயர் அப்படி. தமிழ் அப்படி. அதுக்கு ஆக சாதியில் குறைந்தவள் ஆகிவிட முடியுமா?
இந்த முக நூலிலும் சரி எல்லோரும் உயர்ந்த ஜாதியினர் வாழும் பகுதியை தான் கூறுகின்றார்கள். இணுவில். அச்சுவேலி..பலாலி .. ஏன் இப்படி ஜாதிவெறி பிடித்து அலைகிரார்கள் என்பது புரியவில்லை.
அந்த யாழ்ப்பான ஜாதி வெறியனுக்கு தெரியாத ஓன்று மறந்த ஓன்று. அவன் மட்டும் அல்ல பலர் மறக்கிறார்கள். உண்மையில் இவர்கள் நாடு அற்ற அகதிகள். ஆனால் நான் என்னை போன்ற வடக்கிதியார்களுக்கு சொல்லி கொள்ள ஒரு ஊர் உண்டு. அங்கே வீடு உண்டு. யாழ்ப்பாண குரங்கே உன்னிடம் என்ன உண்டு. சொந்த நாட்டில் சொந்த ஊரில் நீங்கள் அகதிகள் தானே.
ஜாதி பேதம் இன்றி பெண்ணின் அங்க அழகுகளை ரசிக்க முடிகிறது. ஆனால் பேசும் மொழி ஓன்று என்று ஆனபோதும் ஜாதி பார். என்ன இனமோ...
நீங்களும் ஜாதி பார்த்து யார்மனதையும் காயம் செய்யாதிர்கள். ஜாதிகள் இல்லையடி பாப்பா. பாரதியார். இந்த கூற்றுக்கு ஏற்றவாறு வாழ கற்று கொள்வோமே. இனி வளரும் சமுகத்தை ஆவது ஜாதி அற்று வாழவிடுங்கள்.
வணக்கம்.
அன்புடனும் நட்புடனும்
ஜெனிதா பிரதீப் ( பிரதீப் என்ன ஜாதி என்று கேட்பவர்களுக்கு ஆண்ஜாதி)
நன்றி - Facebook
0 commentaires :
Post a Comment