6/22/2011

கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று காரசாரமான விவாதங்களுடன் நாளையும் ஒத்தி வைப்பு

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று(21.06.2011) சபையின் தவிசாளர் எச்.எம்.எம். பாயிஸ் தலைமையில் கூடியது. வழமயைப் போல் அல்லாது இவ் அமர்வு மிகக்கடும் வாதப் பிரதிவாதங்களுடன் ஆரம்பமாகி நாளையும் அமர்வு இடம்பெறும் என தவிசாளர் அறிவித்துள்ளார்.
இன்று முழுநாளுமே பிற்போடப்பட்ட கிழக்கு மாகாண ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாகவே பேசப்பட்டது. இதனை ஜனாதிபதி டிசம்பர் மாதம்வரை ஒத்தி வைக்கும்படி உத்தரவிட்டதற்கமைய பிற்போடப்பட்டுள்ள நிலையில் இன்றைய நாள் முழுவதுமே அது பற்றி விவாதித்தமையானது எதிர் காலத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டதைப் போன்று இடமாற்றம் இடம்பெறுமா? என்ற சந்தேகத்தினையும் ஏற்படுத்தி இருக்கிறது.

0 commentaires :

Post a Comment