இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விதவைகளின் மறுவாழ்வுக்காக இந்தியா அளித்துள்ள நிதியுதவியுடன் கூடிய செயல்திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கையை இலங்கை அறிவித்துள்ளது.
எட்டு துறைகளில் விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்று அமைச்சர் ஹிஸ்புல்லா கூறுகிறார்.
கிழக்கு மாகாணத்தில் இந்திய முதற்கட்டமாக அளித்துள்ள 203 மில்லியன் ரூபாய்கள் கொண்டு விதவைகளின் நல்வாழ்வுக்கான திட்டங்கள் "சேவா இந்தியா " அமைப்பின் ஊடாக நடை முறைப்படுத்தப்படவிருப்பதாக அவர் கூறுகின்றார்.
இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென 50 இளைஞர் யுவதிகள் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டு அடுத்த வாரம் இந்தியாவிலுள்ள "சேவா இந்தியா" அமைப்பின் ஊடாக பயிற்சி பெறுவதற்காக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாகவும், அவர்கள் பயிற்சி பெற்ற பின்னர் 800 இளம் விதவைகளுக்கு அவர்கள் ஊடாக சுய தொழில் பயிற்சி வழங்கப்பட்டு சுய தொழில் வாயப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்த துணை அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், ஆடைத் தொழில், கணினி, கைப்பணிப் பொருட்கள் உற்பத்தி, உணவு பதனிடல், கால்நடை வளர்ப்பு உட்பட 8 துறைகள் குறித்த சுய தொழில் வாய்ப்பிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.
பயிற்சியின் பின்னர் மாதமொன்றிற்கு ஆகக் குறைந்ததது ரூபா 15 ஆயிரம் குறித்த குடும்பத்தினால் வருமானத்தை பெறக் கூடியதாக இருக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
இதற்கு மேலதிகமாக வடக்கில் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் யுத்த விதவைகளுக்கு சுய தொழில் வாயப்புகளை வழங்க தனது அமைச்சு சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்ததைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
0 commentaires :
Post a Comment