நேற்று (27.06.2011) வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு போட்டி கறுவாக்கேனி பாடசாலை மைதானத்தில் பிரதேச செயலாளர் கிரிதரன் தலமையில் நடைபெற்றது. இவ் விளையாட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டார். இந் நிகழ்வில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல்வர் வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் அதிதிகளாக பிரதி பிரதேச செயலாளர் மற்றும் முதல்வரின் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment