பாடசாலையின் அதிபர் தவராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்: மாணவர்கள் தங்களது கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது பல்வேறு விடயங்களை அவர்கள் கருத்திற்கொள்ள வேண்டும். அந்த வகையில் கற்றலுக்கு அமைதியானதும் மற்றும் தனியான ஓர் சூழல் முக்கியமான ஒன்றாகும். அத்தோடு கற்றதை மீளக்கற்றல் எனபதும் பிரதான அம்சமாகும். ஒரு மாணவன் தான் கற்ற பாடங்களை அன்றோ அல்லது பல நாட்கள் கழித்தோ மீளக்கற்றல் எனபது மிகவும் அவசியமாதொன்றாகும். இவ்வாறான மீளக் கற்றல் நடவடிக்கைகளுக்கு தனிமையான படிப்பதற்கேற்ற ஓர் சூழல் முக்கியமானதாகும். அவ்வாறான சூழலாக அமைக்கபடவுள்ள மாவர் விடுதி பயன்படும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். தங்கி இருந்து மாணவர்கள் கற்கின்ற போது அவர்குள்கு ஓர் அக்கறை மற்றும் நம்பிக்கை என்பன ஏற்படும். இதனூடாக எமது சமூகத்தினது கல்வி வளர்ச்சியினை நாம் அதிகரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
6/10/2011
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment