6/04/2011

கிழக்கு மாகாண சபையின் தலைமைக்காரியாலம் வரோதய நகருக்கு இடமாற்றம்.

கிழக்கு மாகாண சபையின் தலைமைக்காரியாலயம் வரோதய நகருக்கு இன்று (இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் பிரதான அலுவலகங்கள் அமைச்சுக்கள் மற்றும் முதலமைச்சர் செயலகம் என்பன இன்றிலிருந்து வரோதய நகரிலே அமைந்துள்ள கிழக்கு மாகாண சபையின் தலைமைக்காரியாலயத்திலே முதலமைச்சர் செயலகம் இயங்கும் என முதலமைச்சரின் ஊடகப்பிரிவு செயலாளர் ஆ.தேவராஜா தெரிவித்தார்.
ஏலவே உட்துறைமுக வீதி, திருமலையில் இயங்கி வந்த மேற்படி அலுவலகம் இன்றுமுதல் வரோதய நகரிலே இயங்க இருக்கிறது. முக்கள் தங்களது பணிகளையும் தேவைகளையும் நிறைவேற்றும் பொருட்டு முதலமைச்சரது அலுவலகத்திற்கு வருகை தருவோர் இன்றிலிருந்து வரோதய நகரில் இயங்கும் முதலமைச்சர் செயலகத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இன்று முதலமைச்சரது அலுவலகம் சுபவேளைமு.ப.09.30 மணிக்கு முதலமைச்சர் சந்திரகாந்தனால் திறந்து வைக்கப்படது.
இந்நிகழ்வில்  மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பே.எம்.எஸ்.சுபைர், மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம் முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி எஸ் அமலநாதன் மற்றும் முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment