6/07/2011

போக்குவரத்து வசதியற்ற குக்கிராமங்களிட்கும் மோட்டார் சைக்கிளில் பயணித்து இந்த பாடசாலையை திறந்து வைக்கும் முதலமைச்சர்


தளவாய் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அளப்பரிய சேவை ஆற்றி வந்த மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனின் முன்னால் தலைவர், இறைபதம் அடைந்த சுவாமி அஜராத் மகானந்தா ஜீ அவர்களின் நினைவாக அக்குறாணை பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால்  பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரம்; அடைந்து இன்று வரை பாடசாலை இல்லாது பிள்ளைகள் கல்வியினைத் தொடராமல் இருந்த அக்குறாணை பிரதேசத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களினால் இப் புதிய பாடசாலை திறந்து வைக்கப்பட்டது. 120 குடும்பங்களைக் கொண்ட அக்குறாணை கிராமம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்த போதிலும் இப் பாடசாலை அமைக்கப்படாததினால் இப் பகுதி மக்களுக்கு கல்வி கற்பதாயிருந்தால் 5மஅ அப்பால் சென்றே கல்வி கற்க வேண்டிய நிலை காணப்பட்டது.
இதனால் 70க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பருவத்தினை தாண்டி கல்வி கற்காமல் காணப்பட்டனர். அரச சார்பற்ற நிறுவனங்களும் பொது அமைப்புக்களும் ஆரம்ப கல்வி கற்பிப்பதற்கு பல சிரமங்கள் எதிர் நோக்கி வந்தனர். பாடசாலை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்த கிழக்கு மாகாண முதலமைச்சர் பாடசாலைக்கு வேறு பெயர் சூட்டப்பட்டிருந்த போதும் வணங்கத்துக்குரிய சுவாமி அஜராத் மகானந்தா ஜீ அவர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் இப்பாடசாலைக்கு சுவாமி அவர்களின் பெயரை சூட்டிவைத்தார்.
சுமார் 6மஅ தூரத்துக்கு மேல் வாகனம் பயணிக்க முடியாத நிலையிலும் எந்த வித பாதுகாப்புமின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்து இந்த பாடசாலையை திறந்து வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் தவராஜா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ரவி, கோட்டக் கல்விப் பணிப்பாளர் குணலிங்கம் போன்ற பலர் கலந்து சிறப்பித்தனர்.

0 commentaires :

Post a Comment