இன்று புதிய வீதிகள் அமைத்தல் நிகழ்வு அரசடித்தீவு, கடுக்காமுனை, மகிழடித்தீவு, திருப்பழுகாமம், காத்தான்குடி ஆகிய இடங்களில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகான முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். கிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண அமைச்சரான உதுமாலெவ்பை மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், எட்வின் கிருஸ்னானந்தராஜா, பரீட், முபீன் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள், கிராமசேவை உத்தியோகஸ்த்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment