6/23/2011

ஆதிக்குடி தலைவருடன் முதலமைச்சர் சந்திரகாந்தன் சந்திப்பு


இலங்கையின் ஆதிக்குடி மக்களின் தெஹியத்த கண்டி தலைவர் தலவர்க்கயே குணபண்டா அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை இன்று (22.06.2011)  அவரது திருமலை வாசஸ்த்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கிழக்கு மாகாணத்திலே அம்பாரை மாவட்டத்தில் தெஹியத்த கண்டி பிரதேசத்தில் வாழ்கின்ற தாம் குறிப்பிட்ட சில பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும். அது தொடர்பில் முதலமைச்சருக்கு தெரியப்படுத்தி தங்களுக்கான உதவிகளை பெற்றுக் கொள்வதற்காவே தாம் இச்சந்திப்பை மேற்கொண்டதாவும் அவர் தெரிவலித்தார்.
முதலமைச்சர் சந்திகாந்தன் தங்களது பிரதேசத்தினை வருகின்ற கிழமை நேரில் சென்று பார்வையிட்டு குறிப்பிட்ட சில உதவிகளை செய்து தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment