கடந்த 20வருடங்களாக மக்கள் பயன்படுத்தாது விமானப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த வீதி இன்று(31.05.2011) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் மக்களின் பாவனைக்காக திறந்துவிடப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களிலே ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலைகாரணமாக பாதுகாப்பின் காரணம் கருதி மேற்படி மட்டக்களப்பு திருப்பெருந்துறை பிரதான வீதி விமானப்படையினரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ஆனால் தற்போது சமாதான சூழ்நிலை நிலவுவதால் மக்கள் தங்களது பாவனைக்காக குறித்த வீதியினை பெற்றுத் தரும்படி முதலமைச்சரின் விடுத்த கோரிக்கையினையடுத்து. முதலமைச்சர் சந்திரகாந்தன் அதற்குப் பொறுப்பான பாதுகாப்பு அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு உடனடியாக இன்று திறந்து வைத்தார்.
குறித்த பாதை மக்களது பாவனைக்காக திறந்து விடப்பட்டதனால் தங்களுக்கான போக்குவரத்து நேரத்தனை மீதப்படுத்த முடியும் என அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள். அத்தோடு குறித்த வீதியானது தற்போது தூர்ந்து போன நிலையில் உள்ளதனால் இதனை செப்பனிடுவதற்கான உத்தரவினையும் முதலமைச்சர் விடுத்துள்ளார். குறித்த வீதியானது மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதி என்பது குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment