ஒரு நாட்டில் முதுகெலும்பாக உள்ள இளைஞர்களை அந்நாடும் சமூகமும் கையாளும் விதத்திலேயே எதிர்கால பலம் தங்கியுள்ளது.
வேலைவாய்ப்பிலும,; பொருளாதார அபிவிருத்திப் பணிகளிலும், சமுக நிர்வாகப் பணிகளிலும் அனுபவம், சிபார்சு என்ற வசனங்களை விடுத்து அதிகாரிகளும் தலைமைகளும் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நினைத்த எதையும் சாதிக்கும் திறன் கொண்ட இளைஞர் சமூகம் இன்று அரசு உத்தியோகம், வெளிநாட்டுப் பயணம் என்று வாயுள்ள போலி ஜாம்பவான்களால் ஏமாற்றப்படுகின்றனர். வேலை தருகின்றோம், வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றோம் என்று பெருந்தொகையான நிதி கேட்பதாகவும் சாதாரண ஏழைகளும் கடன் பெறுவதும் இருக்கும் வீடுகளை அடமானம் வைப்பதும் பின்பு ஏமாற்றப்படுவதும் என மக்கள் குறை கூறும் போது பெரும் வேதனையைத் தருகின்றது.
இவ்வாறு போலித்தனமாக இளைஞர்களை ஏய்ப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பட்டம் முடிப்பவர்களைத் தவிர ஏனைய இளைஞர்கள் சோர்ந்து போகக்கூடாது. சுய ஆளுமையை அதிகப்படுத்த வேண்டும். பொழுதுபோக்கு வீண்பேச்சுக்களுக்கு அப்பால் நேரத்தை பிரயோசனமாக பயன்படுத்த வேண்டும். எம் இளைஞர் சமூகத்தினை நம்பி பாதிக்கப்பட்ட சமூகம் உண்டு. வழிகாட்ட வேண்டிய கடமைப்பாடு எமக்கே உண்டு. பெரும் பொறுப்பு இளைஞர்களின் தோழ்களில் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அப் பொறுப்புக்களை சுமக்கும் இளைஞர்கள் ஆளுமை மிக்கவர்களாக மாற வேண்டும். மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் சமூகத்திலும் விவேகத்திலும் வல்லவர்களாக இருந்தாலும் தம்மை நவினயுகத்திற்கு ஏற்றாற் போல் மாற்றிக் கொள்வதில் மிகவும் பின்னணியிலேயே உள்ளனர். பட்டதாரிகள் கூட வேலை கிடைக்கும் வரை இயலளவை அதிகரிக்கச் செய்ய வேண்டும். பொழித் திறனை வளர்க்க வேண்டும். இதற்கு போதிய பங்களிப்பை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் மாகாண சபையும் செய்து கொண்டே உள்ளது. இதனை பாவித்து முன்னேற்றப்பாதைக்கு செல்ல வேண்டியது இளைஞர்கள் கையிலேயே உள்ளது.
தேசிய இளைஞர் சேவை மன்ற பணிமனைக்கும் மாவட்ட இளைஞர் அபிவிருத்தி சம்மேளனத்திற்கும் கடந்த காலங்களில் ஏற்பட்டு வரும் புரிந்துணர்வு இன்மை மிக விரைவில் தீர்த்துவைக்கப்படும். அத்தோடு மிக நீண்டகாலமாக ருளுயுஐனு நிறுவனத்தால் இளைஞர்களுக்கென குறித்தொதுக்கப்பட்ட 45 இலட்சம் ரூபா பெறுமதியான இசைக்கருவிகளை வைத்து மாவட்ட ரீதியில் இளைஞர் இசைக்குழு ஒன்று ஆரம்பித்து இலைமறையாக உள்ள இளைஞர்களின் திறனை வெளிக்கொண்டுவருவதற்கு ஏற்பாடு செய்யும்படி தேசிய இளைஞர் சேவைகள் மன்றப் பணிமனையினைப் பணித்துள்ளோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.
இலங்கை இளைஞர் அபிவிருத்தி ஒன்றியத்தின் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான விஷேட கலந்துரையாடல் கிழக்கு மாகாண சபை இணைப்புச் செயலகத்தில் அண்மையில் தலைவர் வினோக்காந்தன் தலைமையில் நடைபெற்ற போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
0 commentaires :
Post a Comment