மாகாண சபையின் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கையினை சீர்படுத்துவதற்கு பல முனைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. எனினும் கிராமப்புறங்களில் உள்ள கல்வி நிலைமைகளை சீர்படுத்துவதற்கு ஆசிரியர் சமப்படுத்தல், தகுதி வாய்ந்த அதிபர்களை நியமிக்கின்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற வேளையில் கிராமப்புறங்களுக்கான போக்குவரத்தில் உள்ள தாமதங்களால் அதிகாரிகளும் ஆசிரியர்களும் கிரமப்புறங்களுக்கு செல்வதில் அளெகரியங்களை எதிர்நோக்க வேண்டிவருகின்றது. போக்குவரத்து போது சீர்படுத்தப் படுகின்ற வேளையில் மாகாணத்தில் அனைத்துப்பணிகளையும் நெறிப்படுத்த முடியும். கிழக்கு மாகாண சபையின் ஊடான திட்டங்களின் மூலம் வீதிகள் சீரமைக்கப்பட்டுவருகின்றது. ஆகவே தனியார் போக்குவரத்து துறையினருக்கும் இலங்கை போக்குவரத்து சபையும் இணைந்து முறையான போக்குவரத்து சேவையினை வழங்க வேண்டும். இதன்பொருட்டு சீரமைக்கப்படாத பாதைகள் இருப்பின் அதனை சீர்படுத்தி தருவதற்கும் இலங்கை போக்குவரத்து சபையில் காணப்படுகின்ற தேவைப்படுகள் தொடர்பாக மத்திய அரசு அமைச்சருடன் கலந்துரையாடி வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்துதரப்படும். இதன் முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபைகளுக்கும் உதிரிப்பாகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.
அண்மையில் கிழக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபை சாலை முகாமையாளர்கள், பொறியியலாளர்கள் கிழக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபை உயர் அதிகாரிகள் ஊடான கலந்துரையாடல் இலங்கை போக்குவரத்து சபையில் மட்டக்களப்பு பணிமனையில் இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாணத்தில் உள்ள 16 சாலைகளின் முகாமையாளர்கள் தமது சாலை செயற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து தனியார் போக்குவரத்து சபைக்கும் அரச போக்குவரத்து சபைக்கும் இடையில் நேர ஒழுங்கமைப்பு உட்பட இணக்கப்பாடுகள் மேற்கொள்ள தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், இலங்கை போக்குவரத்து சபை கிழக்கு மாகாண அதிகாரி நஸீர் போன்ற பலர் கலந்துகொண்டனர்.
0 commentaires :
Post a Comment