6/30/2011

பாசிக்குடா கடற்கரையினை முகாமை செய்யும் பொறுப்பு கிழக்கு மாகாண சபைக்கு

பாசிக்குடா உல்லாச புரியில் உள்ளுர் உல்லாச பயணிகளின் நன்மை கருதியும் பொதுமக்கள் குளிப்பதற்கான இடத்தினை ஒதுக்கித் தர வேண்டும் என்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் வேண்டு கோளுக்கு அமைய பாசிக்குடா மாலு மாலு கோட்டலில் திங்கள் கிழமையன்று ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வொன்றில் அதனை கிழக்கு மாகாண சபைக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையை பொருளாதார அபிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் மகிந்த அபேயவர்தன யாப்பா. முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் வைபவ ரீதியாக கையளித்தார். இதில் கிழக்கு மாகாண சபை பிரதம செயலாளார் வீ.பி. பாலசிங்கம். கிழக்கு மாகாண உள்ளுராட்சி  ஆணையாளர் எம். உதயகுமார். கிழக்கு மாகான சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன். பிரதேச செயலாளர் எஸ் கிரிதரன். பிரதேச சபை தவிசாளர் தா. உதயஜீவதாஸ் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment