நடைபெற்று முடிந்த க.பொ.சா.த. உயதரப் பரீட்சையிலே மட்டக்களப்பு மாவட்த்தைச் சேர்ந்த மாணவி கலைப்பிரிவில் அதிசிறப்பு சித்திபெற்று எமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இவரை கிழக்கு மாகாண மதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் பாராட்டி கௌரவித்துள்ளார்.
மட்/வின்சன்ட் மகளிர் உயாதரப் பாடசாலையில் கல்வி பெற்ற ரி. தேவப்பிரியா என்ற மாணவியே மேற்படி சாதனையினை புரிந்துள்ளார். இவர் கடந்த உயாதரப் பரீட்சையிலே கலைப்பிரிவில் தோற்றி மாகாண மட்டத்திலே முதலாவது இடத்தினையும் அகில இலங்கைரீதியில் 13வது இடத்தினையும் பெற்றுள்ளார். இவர் மட்டக்களப்பு திராய்மடு(சுவிஸ் கிராமத்திலே வசித்து வரும் மிகவும் வறுமைக்குடும்பத்தினைச் சோந்த ஓர் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தொடந்து தனது மேற்படிப்பினை தொடர்வதற்குரிய தேவையான உதவிகளை முதலமைச்சர் சந்திரகாந்தன் வழங்குவதாகவும் குறித்த மாணவியிடம் தெரிவித்துள்ளார். குறித்த மாணவி அவரது தாயாருடன் இருப்பதனையும் முதலமைச்சர் சந்திரகாந்தன் பாராட்டி பரிசில் வழங்குவதனையும் படத்தில் காணலாம்.
0 commentaires :
Post a Comment