மக்கள் மீதான நேட்டோ தாக்குதலுக்கு ஐ.நா தனி விசாரணை கோருகிறார் கடாபி
நேட்டோ படைகள் பொதுமக்கள் மீது நடத்தும் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கெளன்ஸில் தனிவிசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி கேட்டுக்கொண்டுள்ளார்.
லிபிய அரச தொலைக்காட்சியில் தொலைபேசி மூலம் பேசியபோதே கடாபி இந்த வேண்டுகோளை விடுத்தார்.
திரிபோலியில் குடியிருப்பு பகுதி மீது நேட்டோ படை நடத்திவரும் தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனமான செயல் என கடாபி விமர்சித்தார்.
இதில் கடாபி மேலும் கூறும்போது; நாங்கள் முஸ்லிம்கள் அதனால் நீங்கள் வெறுக்கிaர்கள். எங்கள் மக்கள் மீது குண்டு மழை பொழிகிaர்கள். நான் மக்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்கிறேன் இராணுவ தளங்களை மட்டும் தாக்குவதாக கூறிக்கொள்ளும் நேட்டோ படைகள் திரிபோலியின் குடியிருப்பில் தாக்குதலை நடத்துகிறது என்றார்
0 commentaires :
Post a Comment