வவுனியா விருலாநந்தாக் கல்லூரி மாணவர்கள் மூன்று நாள் சுற்றுலா பயணம் மேற்கொண்டு முதல் நாள் கிழக்கு மாகாண சபை அமர்வினை பார்வையிடுவதற்கு இன்று கிழக்கு மாகாண சபைக்கு வருகை தந்திருந்தார்கள். கிழக்கு மாகாண சபை அமைர்வினை பார்வையிட்ட பின்னர் கல்லூரி மாணவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை சந்தித்து தங்களது சந்தேகங்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை அமர்வுகளின் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்கள். மாணவர்கள் முதலமைச்சருடன் கலந்துரையாடுவதையும் முதலமைச்சர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து மாணவர்கள் நிற்பதனையும் படத்தில் காணலாம்.
0 commentaires :
Post a Comment