6/04/2011

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான பிரதீப் மாஸ்ரர் விடுவிக்கப்பட்டார்.


கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பிரதீப் மாஸ்ரர் என அழைக்கப்படும் எட்வின் கிருஸ்னானந்தராஜா அவர்கள் கடந்த மே மாதம் 16 ந் திகதி முதலமைச்சரின் காரியாலயத்தில்வைத்து முகமூடியணிந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டார். இது விடயத்தின் எதிரொலியாக தமது ஆட்சேபயினைத் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சரும், அவர் சார்ந்த கட்சியின் ஏனைய மாகாண சபை உறுப்பினர்களும் இராஜினாமாச் செய்வதற்கான முடிவினை மேற்கொண்டனர். இந்நிலையில் ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஸ அவாகள் இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட முதலமைச்சரை வரவழைத்து நிலைமைகளை நேரடியாக ஆராய்ந்த நிலையில் அவ்விடயம் தொடர்பாக விரைவான விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தவறாயின் விரைவில் அவரை விடுதலை செய்வதாக உறுதியளித்ததற்கமைய அவர் நிரபராதி என காணப்பட்டு இன்று அவர் மட்டுநகருக்கு கொண்டுசெல்லப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

0 commentaires :

Post a Comment