6/11/2011

பாலர் பாடசாலை பணியகம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாலர் பாடசாலைகளையும் புதிதாக கிழக்கு மாகாண சபையால் உருவாக்கப்பட்ட பாலர் பாடசாலை நியதிச் சட்டத்தின் பிரகாரம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ள பாலர் பாடசாலை பணியகத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(10.06.2011) கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் காலை 10.00மணிக்கு இடம்பெற்றது.
மேற்படி கலந்துரையாடலில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பணியத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர் காலத்தில் பணியகம் ஆற்ற உள்ள செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு பாலர் பாடசாலைகளை ஒருமுகப்படுத்டதல், ஆசிரியர்கள் தரப்படுத்தல,; அவர்களுக்கான சம்பள நியமங்களை பேணல் தொடர்பாக மேலும் ஆராயப்பட்டது. மேற்படி விசேட கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பின் பூ. பிரசாந்தன், முதலமைச்சரின் செயலாள் கலாநிதி எஸ்.அமலநாதன், பாலர் பாடசாலை பணியகத்தின் பணிப்பாளர் நடராஜா, மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் கோபாலகிருஸ்ணன், பிரதேச செயலாளர்கள் மற்றும் தற்போது பாலர் பாடசாலைகளை இயக்கி வருகின்ற பொறுப்பு வாய்ந்த அமைப்புக்களின் பிரதிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment