6/19/2011

மக்கள் மற்றும் பிரதேசம் பற்றி நன்கு தெரிந்தவர்களேதான் அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும்- முதலமைச்சர் சந்திரகாந்தன்.

கடந்த 60ஆண்டுகளில் மக்கள் கண்டிராத பெருமளவிலான அபிவிருத்திகளை கிழக்கு மாகாண சபை அமையப்பெற்றதன் பின்னர் அதாவது இந்த 3ஆண்டுகாலப்பகுதியில் எமது கிழக்கு மாகாண மக்கள் பெற்றிருக்கின்றார்கள். எமது மக்கள், அவர்கள் வாழ்கின்ற பிரதேசங்கள் என்பன பற்றி நன்கு தெரிந்திருந்தாலே அவர்களுக்கான அபிவிருத்திகளை விரைவாகவும் நேரடியான பங்குபற்றுதலுடனும் செய்து முடிக்கலாம் என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். இன்று வாகரைப் பிரதேச செயலாளர் பிhவிலுள்ள புச்சாக்கேணி கடற்கரைவீதியானது ஜெய்க்கா திட்டத்தின் கீழ் புணர்மானம் செய்படவுள்ளது. இதற்கான ஆரம்பவேலைகளை தொடக்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கிழக்கு மாகாணத்திலே தற்போது பாரிய அளவிலான அபிவிருத்தி கிழக்கு மாகாண சபையினாலேயே முன்னெடுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. இதனை கிழக்கு மாகாண சபையினை நிருவகிக்கின்ற முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களேதான் மேற்கொண்டுவருகின்றோம். இதற்கு எமது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் பூரண ஒத்துழைப்பினை எமது மாகாணத்திற்கு வழங்கி வருகின்றார். அவருக்கு கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் நன்றி கூறகடமப்பட்டிருக்கின்றோம்.
யுத்தத்தின் கோரப்பிடியினால் கிழக்கில் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசம் வாகரை ஆகும். ஆகவே இதனை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு சிறுpது காலம் எடுக்கும். ஆனாலும் மட்டக்களப்பு மாவட்டத்திலே இப் பிரதேசத்திற்கே அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். இந்த வேளையிலே மக்கள் தெளிவாக சில விடயங்களை விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது உங்களோடு உங்களில் ஒருவராக நின்று சேவை செய்யக் கூடியவர்களை நீங்கள் அடையாளங் காணவேண்டும். அது மாத்திரமல்லாது உங்களது பிரதேசம் உங்களது நிலைமைகளை நேரில் வந்து பாhத்து அதனை விளங்கிக் கொள்ளக் கூடியவர்களை நீங்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். அவ்வாறானவர்களையே நீங்கள் ஆதரிக் வேண்டும். அவ்வாறான பணிகளை எமது கடட்சிதான் மேற்கொண்டு வருகின்றது. உங்களுக்கு தெரியும் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவினை எடுத்துகொண்டால் பிரதேச சபைத் தவிசாளர் எமது கட்சியினைச்; சேர்ந்த இப் பிரதேசத்தினை பிறப்பிடமாகக்; கொண்ட ஒருவர். அதேபோல் கிழக்கு மாகாண சபை உறுப்பினரை எடுத்துக் கொண்டால் அவரும் எமது கட்சியின் பிரதித் தலைவரானவர் இப்பிரதேசத்தின் குடிமகன. அதே போல் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்ராகிய நானும் இப் பிரதேசம் மக்கள் பற்றி நன்கு அறிந்து கொண்டவன் எனவே எங்களாலேயேதான் இப் பிரதேசத்தின் அபிவிருத்திப ற்றி சிந்திக்க முடியும். எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபைஉறுப்;பினர்களான நா.திரவியம், ஜவாஹிர்சாலி , இஸ்மாயில் பிரதேச சபை தவிசாளர் கணேசன், பிரதேச செயலாளர் செல்வி ராகுலநாயகி, மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவிச் செயலாளளர் சலாகுதீன் ஆகியோர் கரலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment