.
மட் தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வு கூட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வித்தியாலயத்தின் அதிபர் S. ரவிதேவன் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே யுத்தம், சுனாமி என பல்வேறு அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட ஓர் பிரதேசம் இந்த தளவாய் பிரதேசமாகும் இவ்வாறாக பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் எமக்கு அத்தியாவசியமாக இருக்கின்ற கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதிலும் இவ்வாறான பிரதேசங்களிலே அடிப்படைக் கல்வி என்பது மிக முக்கியமானதொன்றாகவே அமைந்திருக்கின்றது. இதற்காக நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த காலங்களிலும் சரி தற்காலத்திலும் சரி தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமைகள் என தங்களை இனங்காட்டுவோர் எமது சமூகத்தினருக்கு உணர்வுகளை ஊட்டி உணர்ச்சி வசப்படுத்தி தமிழர்கள் என்றால் உசுப்பேற்றி எமது சமூகத்தை குட்டிச்சுவராக்கினார்களே தவிர எமது சமூகம் எதிர்காலத்தில் பயனிக்க வேண்டிய திசைகள் எமது சமூகத்தின் இருப்பு பலம் ஏனைய சமூகம் சார்ந்த அனைத்து விடையங்களை செவிமடுக்காது அதாவது தமிழர்கள் வீரம் மாத்திரம்தான் மெச்சப்பட்டதே தவிர அவர்களது விவேகம் பற்றி ஒரு பொழுதும் அவர்கள் சிந்திக்கவில்லை.
ஆனால் நாம் தற்போது அவ்வாறு இருக்க முடியாது. எமக்கு கிடைத்திருக்கின்ற இந்த சூழலை சரியாக பயன்படுத்த வேண்டும் அதாவது கடந்த காலங்களிலும் எமது சமூகம் பொருளாதார ரீதியாக பல பின்னடைவுகளை மற்றும் சமூக ரீதியாக பின்னடைவுகளையும் சந்தித்து இருக்கின்றது. இவற்றினை நாம் தற்போதைய இந்தச் சூழலிலே ஈடு செய்ய வேண்டும், அதற்காக எமது தேவையான அடிப்படையாக இருக்கின்ற கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதனூடாக பல்வேறு துறைசார்ந்த அபிவிருத்திகளையும் நாம் அடைந்துகொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார். மேற்படி விஞ்ஞான ஆய்வுகூட கட்டிடத்திற்காக முதலமைச்சரது நிதியிலிருந்து 25 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment