6/14/2011

நிரந்தர அமைதியும், சமாதானமும் நிலைகொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் நாட்டிலுள்ள சில அரசியல் தலைவர்கள் கச்சத்தீவு விடயத் தில் அரசியல் இலாபம் தேட எத்தனிக்கும் முயற்சிகளை இனி மேலாவது கைவிட வேண்டும்


பாக்கு நீரிணையில் இருக்கும் கச்சதீவு இலங்கைக்கு சொந்த மான ஒரு தீவு. இத்தீவின் நிர்வாகம் இலங்கையின் இறை மைக்கு உட்பட்டதாக அமைந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கச்சதீவை மீண்டும் இந்தியா இலங்கையிடம் இருந்து பறித்து தமிழ்நாட்டின் ஒரு பிரதேசமாக இணைத்துக் கொள்ள வேண்டுமென்று மேற்கொள்ளும் போராட் டம் என்றுமே வெற்றியடையப் போவதில்லை என்று கடற்றொழில், நீர்வள அபிவிருத்தித் துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தியா சர்வதேச சட்டங்களை மதித்து நடக்கும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகும். எனவே, இந்திய அரசாங்கம் எக் காரணம் கொண்டும் செல்வி ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு செவிமடுத்து செயற்படப் போவதில்லை. இலங்கைக்கும் இந்தியா விற்கும் இடையிலான பல்லாண்டு காலம் நிலைத்திருக்கும் நல்லுற வும், பரஸ்பர ஒத்துழைப்பும் கச்சதீவு பிரச்சினையினால் என்றுமே சீர்குலைந்துவிடாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
1974ம் ஆண்டில் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி அம்மையாருக்கும், இலங்கைப் பிரதம மந்திரி சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாருக்கும் இடையிலிருந்த நட்புறவும், ஒத்துழைப்பு காரணமாகவே இந்திய அரசாங்கம் கச்சதீவு இலங் கைக்கு தான் சொந்தமானது என்ற தீர்க்கமான சரியான முடிவை எடுத்து, அதனை அவ்வாண்டில் நிறைவேற்றப்பட்ட இந்திரா – சிறிமாவோ ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தது.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் வரையில் இலங்கை, இந்திய கடற் றொழிலாளர்கள் கடலில் நீண்டநேரம் மீன்பிடித்த பின்னர் கச்சதீவு கரையில் இறங்கி, அங்கு சில மணித்தியாலங்கள் ஓய்வெடுத்து தாங்கள் கொண்டுவந்த ஆகாரத்தை சமைத்து வயிறாற புசித்த பின்னர் மீண்டும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிப்பார்கள்.
இத்தகைய சந்தர்ப்பங்களில் இலங்கை மீனவர்களுக்கோ, இந்திய மீன வர்களுக்கோ இடையில் எக்காரணம் கொண்டும் கசப்புணர்வு களோ, வன்முறைகளோ ஏற்பட்டதில்லை. அதற்கு காரணம் கச்ச தீவில் இருக்கும் ஒரே ஒரு கட்டடத்தில் அமைந்திருக்கும் புனித அந்தோனியாரின் சிறிய தேவாலயமாகும். அங்கு மீனவர்கள் இந்துக் களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ இருந்தாலும் கடலில் தங்களை வழிகாட்டி காப்பாற்றும் தெய்வமாக மதிக்கும் புனித அந்தோனியாரின் திருப்பாதங்களில் மண்டியிட்டு அவரது ஆசிர்வாதத்துடனேயே தங்கள் கடற்றொழிலை ஆரம்பிப்பதுண்டு.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நடைபெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இலங்கையிலிருந்தும், இந்தி யாவில் இருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் சென்று கலந்து கொள் வார்கள். இந்த சந்தர்ப்பத்தில் இந்தியர்கள் தங்கள் கைவசமுள்ள சேலை போன்ற பலதரப்பட்ட பொருட்களை அங்கு கொண்டு வந்து இலங்கைப் பயணிகளுக்கு விற்பனை செய்வார்கள். அது போன்று இலங்கையரும் இந்தியாவில் அன்று தட்டுப்பாடக இருந்த தேங்காய் எண்ணெய், சவர்க்காரம் போன்ற பொருட்களை இந்தியர்களுக்கு விற்பனை செய்வார்கள்.
இரு நாட்டு மக்களுக்கிடையில் இருந்த இந்த நல்லுறவு இலங்கையில் பயங்கரவாதம் தோன்றிய பின்னரே பாதிப்பிற்குள்ளானது. அதற்கு பின்னரே பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை கடற்படையி னரின் கெடுபிடிகளும் ஆரம்பமாகின.
70ம் ஆண்டு தசாப்தத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையா ரின் அரசாங்கம் இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து உப உணவுப் பொருட்களின் இறக்குமதியை முற்றாக தடை செய்த போது, இலங்கையில் ஒரு இறாத்தல் செத்தல் மிளகாய் 45ரூபாவுக்கு விற் பனையாகியது. இது ஒரு பெரும் விலை அதிகரிப்பு என்பதனால் அன்று மக்கள் செத்தல் மிளகாய்க்கு பதில் மிளகையே காரத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்தினார்கள்.
இந்த கச்சதீவு திருவிழா காலத்தில் இந்தியர்கள் ஒரு இறாத்தல் மிள காயை 4 ரூபாவிற்கு கச்சதீவில் விற்கும் போது அவற்றை எமது மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வார்கள். கச்சத்தீவு இவ்விரு நாடுகளின் நட்புறவின் மையமாக அன்று விளங்கி வந்தது.
தமிழ் நாட்டின் அரசியல்வாதிகள் கச்சதீவையும், கடற்றொழிலாளர்களின் பிரச்சினையையும் அரசியலாக்கி தமிழ்நாட்டு மக்களின் அவதான த்தை திசைதிருப்பி மாநில அரசாங்கத்தின் பலவீனங்களை மறை த்துவிட எத்தனிக்கின்ற போதிலும் கச்சத்தீவுப் பிரச்சினை இலங்கை இந்திய நல்லுறவுக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று டாக்டர் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரி வித்துள்ளார்.
இன்றும் கூட கச்சதீவு இலங்கையின் இறைமையின் கீழ் வரும் ஒரு பிரதேசமாக இருக்கின்ற போதிலும் அங்கு இந்திய மீனவர்கள் அனுமதியின்றி வந்து தங்கியிருந்து செல்வதற்கு இந்த கச்சதீவு உடன்படிக்கை இடமளிக்கிறது. இவ்விதம் இந்திய மீனவர்களுக்கு கச்சதீவிற்கு வந்து செல்வதற்கு பூரண உரிமையை இருக்கின்ற போதிலும் தமிழ்நாட்டின் மாநில அரசாங்கம் கச்சத்தீவின் மீது உரிமை கொள்வதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து நாம் உண்மையிலேயே வேதனை அடைகின்றோம்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் மீண்டும் நிரந்தர அமைதியும், சமாதானமும் நிலைகொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் நாட்டிலுள்ள சில அரசியல் தலைவர்கள் கச்சத்தீவு விடயத் தில் அரசியல் இலாபம் தேட எத்தனிக்கும் முயற்சிகளை இனி மேலாவது கைவிட வேண்டும். இது இரு நாடுகளுக்கிடை யிலான நல்லுறவு மேலும் சிறப்புற்று விளங்குவதற்கு உதவியாக அமையும்.

0 commentaires :

Post a Comment