6/04/2011

மாகாண சபைகளின் அதிகாரத்தை அதிகரிக்க அரசியல் வட்டாரங்கள் முயற்சி

அரசியல் சாசனத்தின் 13வது திருத்த சட்டத்தில் காணி தொடர்புடைய அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும், இதுவரையில் அந்த அதிகாரம் மாகாண சபைக்கு சட்டபூர்வமான முறையில் கொடுக்கப்படவில்லை. அது போன்று பொலிஸ் அதிகாரங்களும், மாகாணசபைகளுக்கு இருக்கின்ற போதிலும் அந்த அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கு கொடுக்கப்படவில்லை.
இவை போன்ற பலதரப்பட்ட சிக்கல்களுக்கு தீர்வை பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏற்படுத்தி, மாகாணசபைகளை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் பெரிதும் விரும்புகிறதென்று அரசியல் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இவற்றை அடிப்படையாக வைத்து, தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் ஏனைய தமிழ் கட்சிகளுடனும், மற்றும் தென் இலங்கையிலுள்ள கட்சிகள், அமைப்புகள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றுடனும் அரசாங்கம் திறந்த மனதுடன் பேச விரும்புவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான முறையில் நிறைவு பெற்றால், நாட்டின் இனப்பிரச்சினைக்கு சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கான பூர்வாங்க முயற்சிகள் வெற்றியளிக்குமென்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

0 commentaires :

Post a Comment