6/12/2011

இனக்குரோத அரசியல் வெற்றியளிக்காது * கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் *


**
இனக்குரோதங்களைப் பேசி இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்து அதன் மூலம் அரசியல் செய்ய கிழக்கு மாகாண மக்கள் ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டார்கள். புரிந்துணர்வு, ஒற்றுமை, மனிதரை மனிதராக மதிக்கும் மனோதிடம் கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்ட பிற்பாடு இனங்களுக்கிடையே இவை ஊட்டப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டு 3 வருடங்கள் கடந்த நிலையில் தமிழர்களும் முஸ்லீம்களும் சிங்களவர்களும் ஒரே மேசையில் இருந்து பேசக்கூடிய நிலமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் அடிக்கடி முறண்பாடுகள் ஏற்படுவதும் இவ் முறண்பாடுகள் பூதாகரமாக விஸ்வரூபம் எடுப்பதும் அதனால் அப்பாவி தொழிலாளர்களும் பொது மக்களும் இன்னல் படுவதும் அதிகாரத்தில் இருப்பவர்கள் அதனை தனக்கு சாதகமாக பாவிப்பதும் கடந்த கால துர்ப்பாக்கிய நிலையாகக் காணப்பட்டது.
கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்ட பிற்பாடு அந்நிலமை ஓரம் கட்டப்பட்டு எங்கோ கிராம மட்டத்தில் இருக்கின்ற ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அதிகாரம் பிரயோகிக்கப்பட்டாலும் அதனை தலையிட்டு மக்களுக்காக குரல் கொடுக்க கிழக்கு மாகாண சபை தயாராக உள்ளது. இந் நிலையில் சமுகங்களை பிளவுபடுத்தி தமது இருப்புக்களை நிலைப்படுத்தும் அரசியலை ஒருபோதும் சமுகம் ஏற்கப்போவதில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
அண்மையில் ஏறாவூர் வடக்கு தெற்கு கூட்டுறவு உறுப்பினர் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் சமுகங்களுக்கிடையே நலிந்தவர் வலிந்தவர் என்று ஒரு சமுகம் இன்னொரு சமுகத்தை அடக்கி ஆழ்வது என்பது என்றும் நிரந்தர தீர்வாகாது. மனிதனாக படைக்கப்பட்ட எல்லோருக்கும் தனித்துவமாக வாழ்வதற்கு எல்லா உரிமைகளும் உண்டு. அந்த சாதனையினை கிழக்கு மாகாண சபை கடந்த 3 வருடங்களில் சாதித்துள்ளது என்றால் அது மிகையாகாது. உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளுடன் சமுக உறவினையும் வலுப்படுத்தியுள்ள கிழக்கு மாகாண சபையின் தூர நோக்கினை தொடர்ந்தும் பேணிப்பாதுகாக்க வேண்டியது கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு பிரஜைகளினதும் பொறுப்பாகும். குறிப்பாக கூட்டுறவு என்பது அங்கத்தவர்களிடையே மாத்திரமன்றி தமிழ் முஸ்லிம் சமுகங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த பாடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment