6/07/2011

முதலமைச்சரினால் முதலாவது இருமாடிக் கட்டிடடம் திகிலிவெட்டையில்

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் அவர்களது அயராத முயற்சியின் பயனால் வரலாற்றிலே என்றும் இல்லாத அளவிற்கு ஓர் இருமாடிக் கட்டிடம் இன்று உதயமாகி இருக்கிறது. மட் திகிலி வெட்டை அரசின் தமிழ் கலவன் பாடசாலை பல தசாப்த காலம் எந்தவொரு கட்டிடமும் இல்லாது இயங்கி வந்தது. இதனைக் கருத்திற் கொண்ட முதலமைச்சர் சந்திரகாந்தன் மிக்க கரிசனையோடு குறித்த பாடசாலைக்கு தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் இருமாடிக்கட்டத்தினை அமைத்துக் கொடுத்திருந்தார். இக் கட்டிடிடம் இன்று உத்தியோகபூர்வமாக முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.
வித்தியாலயத்தின் அதிபர் இரா ஜீவரெட்ணம் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் , கோரளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் த. உதயஜீவதாஸ், கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரிகள் ஓய்வு பெற்ற அதிபர்கள், பிற பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment