6/11/2011

இந்திய உயர் மட்டக் குழுவினர் இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு


இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இந்திய உயர்மட்டக் குழுவினர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
நேற்று நண்பகல் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் ஆகியோரைக் கொண்ட இந்திய உயர்மட்டக் குழு நேற்றுமாலை வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.
இக்குழுவினர் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய கட்சிப் பிரதிநிதிகளையும் இவர்கள் சந்திக்கவிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரியொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள இந்திய உயர்மட்டக் குழுவினரை இன்று சந்தித்து பல்வேறு விடயங்கள் பற்றிக் கலந்துரையாட விருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது. இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மற்றும் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

0 commentaires :

Post a Comment