கல்குடா கல்வி வலயப் பாடசாலைகளின் அதிபர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் அவர்களோடு முக்கிய சந்திப்பொன்றை இன்று(07.06.2011) பி.ப.4.30 மணிக்கு ஏற்படுத்தி இருந்தார்கள். முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பானது மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்குடா கல்வி வலயத்தின் எதிர்கால முன்நகர்வுகள், தற்போதைய நிலைமை, ஆளணி வளம், பௌதீக வளம் மற்றும் பிற தேவைகள் குறித்து விசேடமாக ஆராயப்பட்டது. ஏலவே இருந்ததை விட தற்போது கல்வி வளர்ச்சியில் ஓரளவு சாதகமான மாற்றத்தினை காணக்கூடியதாக இருக்கிறது. தொடர்ந்து இந் நிலைமை அதிகரித்துக் காணப்பட வேண்டும். அத்தோடு இதற்கு அதிபர்களின் பங்களிப்பு மிகமிக இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. அது மாத்திரமன்றி அதிகாரிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் ஓரிரு வருடங்களில் நாம் எதிர்பார்க்கின்ற இலக்கை அடைய முடியும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலே உள்ள 17 வலயங்களிலும் கல்குடா கல்வி வலயம் கல்வி பொது சாதாரண தரப் பரீட்i பெறுபேற்றின் அடிப்படையில் 11ஆவது இடத்தில் இவ் ஆண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு 14ஆவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கல்குடா கல்வி வலயத்தில் இருக்கின்ற 80 பாடசாலைகளின் அதிபர்களின் மிகவும் பெரும்பாலானோர் இக் கூட்டத்திற்கு பிரசன்னம் ஆகியிருந்தமை விசேட அம்சமாகும்.
அதிபாகள் சார்பாக வலயக் கல்விப் பணிப்பாளர் முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்ட விடயங்கள் அனைத்தும் உரிய காலத்திற்குள் செய்து தரப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். அதாவது மிகக் கஸ்டப் பிரதேசங்களுக்கான போக்குவரத்து, சில பிரதேசங்களுக்கு குடிநீர், புதிய அதிபர்கள் நியமனம் மற்றும் அதிபர்களுக்கான விசேட செயலமர்வு மற்றும் விசேடமாக விஞ்ஞான மற்றும் வர்த்தகத் துறை சார்நத ஆசிரியர்கள் வலயத்திற்கு நியமிக்கப்டுதல் போன்ற விடங்கள் முதலமைச்சரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இவை அனைத்துக்கும் உரிய கால எல்லைக்குள் தீர்வு காணப்படும் எனவும் முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment