கொக்காவில் கோபுரம் நேற்று ஜனாதிபதியால் திறந்து வைப்பு
வட பகுதியின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் திரள்
தெற்காசியாவிலேயே மிக உயர்ந்த தொலைத் தொடர்பு கோபுரம் என வர்ணிக்கப்படும் கொக்காவில் பல்நோக்கு தொலைத் தொடர்பு கோபுரம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட் டது.
தொலைக்காட்சி, வானொலி, தொலைத் தொடர்பு சேவைகளை முழுமையாக வடக்கின் சகல பிரதேசங்களுக்கும் பரிவர்த்தனை செய்யும் கொக்காவில் கோபுரம் 174 மீற்றர் உயரத் தினைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட் டுள்ளது. தொலைத் தொடர்புகள் ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழுவின் அனுசரணை யுடன் 330 மில்லியன் ரூபா செலவில் இக்கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கான முன்னைய கொக்காவில் தொலைத் தொடர்பு கோபுரம் 2008 இல் இலங்கை இராணுவம் கொக் காவில் பிரதேசத்தைக் கைப்பற்றிய பின் மீள் நிர்மாணத்திற்குட்படுத்தப்பட்டது.
வடக்கின் வசந்தம் 180 நாள் அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு குறுகிய காலத்தில் நிர் மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தொலைத்தொடர்பு கோபுரத்தையொட்டிய தொலைத் தொடர்பு மையம் ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கிளிநொச்சிக்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொக்காவில் தொலைத் தொடர்பு கோபுரத்தை உத்தி யோகபூர்வமாகத் திறந்து வைத்தார். அதனையடுத்து கிளிநொச்சி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுயதொழில் புரிவோருக்கான கடன் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கடனுக்கான காசோலைகளைக் கையளித்தார்.
கிளிநொச்சியில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிட்ட ஜனாதிபதி, அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரி களுடன் கலந்துரையாடினார்.
கொக்காவில் தொலைத்தொடர்பு பரிவர்த்தனைக் கோபுரம் நேற்று ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்பட்டது. 1990இல் இங்கிருந்த கோபுரம் புலிகளால் தாக்கி அழிக்கப்படும்போது இறுதிவரை போரிட்டு உயிர்நீத்த கப்டன் அலதெனியவின் உருவச்சிலையை, அங்கு ஜனாதிபதி திரைநீக்கம் செய்துவைத்தார் அதன் பின்பு, அலதெனியவின் தாயார் மற்றும் உறவினர்களுடன் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் உரையாடுகின்றனர்.கொக்காவில் தொலைத் தொடர்பு கோபுரம் உள்ளிட்ட படைத் தளத்தை புலிகளின் தாக்குதலி ணீலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையில் உயிர் தியாகம் செய்த இராணுவ கெப்டன் சாலிய உபுல் எலதெனியவின் ஞாபகார்த்த ஸ்தூபியைப் பார்வையிட்ட ஜனாதிபதி அதற்கு மலரஞ்சலி செய்து கெளரவமளித்தார்.
நேற்றைய இந் நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா, தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தகவல் தொடர்பு சாதன அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இராணு வத் தளபதி, உயர்மட்ட படை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ் தர்கள் பலரும் கலந்து கொண்டனர். வடக்கின் ஐந்து மாவட்டங் களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் அளவளாவினர்.
கொக்காவிலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதிக்கு இராணுவத்தினர் அணி வகுப்பு மரியாதை செலுத்தினர்.
எததகைய அழுத்தங்கள் வந்தாலும் புலிகள் கேட்டதை நாங்கள் வழங்கப் போவதில்லை. தமிழ் மக்களுக்கு எது தேவையோ அதனைக் கருத்திற்கொண்டு அரசியல் தீர்வொன்றை வழங்குவோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார்.
முல்லைத்தீவு கொக்காவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு கோபுரத்தை நேற்றுத் திறந்து வைத்த பின்னர் அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.சில தலைவர்கள் தமிழ் மக்களை தவறான பாதையில் கொண்டு செல்ல முற்படுகிறார்கள். தமிழ் மக்களாகிய நீங்கள் அந்த வலையில் சிக்க வேண்டாம்.
வடக்குக்கு தொலைத்தொடர்பு மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றுக்கான மிக உயரமான கோபுரம் ஒன்று இன்று திறந்து வைக்கப்படுகிறது. இந்த கோபுரத்தைப் போன்றே உங்கள் வாழ்க்கையையும் நாங்கள் உயர்த்துவோம்.
நீங்கள் போதும் போதும் என்று சொல்லுகின்ற அளவுக்கு உங்களுக்கு அபிவிருத்தி, வாழ்வாதார உதவிகளை வழங்குவோம்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உங்களது தேவைகள் எல்லாவற்றையும் எனக்கு அடிக்கடி கூறிவருகிறார். கல்வி, சுகாதாரம், மீன்பிடி, விவசாயம் உள்ளிட்ட உங்கள் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவோம்.
இதற்காகவே கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்தி உங்கள் தேவைகள் பற்றி விசேடமாக ஆராய்ந்தோம். அன்று நாம் அடையாளம் கண்டுகொண்டவற்றை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்.
கிளிநொச்சியில் விவசாயம் மற்றும் பொறியியல் பீடங்களை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். பல்கலைக்கழகத்தின் முன்னோடித் திட்டமாக விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும்.
உங்களது உட்கட்டமைப்பு வசதிகள் மின்சாரம், தண்ணீர் போன்ற முக்கிய தேவைகள் விரைவாக செய்துதரப்படும்.
வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் பாடசாலை மாணவர்கள் அலரிமாளிகைக்கு வருகிறார்கள். அவர்கள் இரு சாராரும் உரையாடுவதை நான் நேரில் அவதானித்திருக்கிறேன்.
நாம் எதிர்பார்த்த வடக்கு தெற்கு உறவு ஏற்பட்டு வருவதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.
பிச்சைக்காரர்களின் புண் போன்று சில அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னெடுக்க முயற்சிக்கிறார்கள். புலிகள் கேட்டதைப் போன்றே சில அரசியல்வாதிகளும் கேட்கிறார்கள். எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்வோம். வடக்கு தெற்குத் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். வெளிநாட்டு சக்திகள் தேவையில்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, கெஹலிய ரம்புக்வெல்ல, ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கனேகல, தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுர பெல்பிட்ட, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ். அரச அதிபர்கள் உட்பட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment