6/06/2011

கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரம் இன்று திறப்பு ஜனாதிபதி பிரதம அதிதி

வடபுலத்தின் கலங்கரை விளக்கு என வர்ணிக்கப்படும் கொக்காவில் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை கோபுரம் இன்று 6 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

வடக்கின் சகல மாவட்ட மக்களும் நன்மையடையும் வகையில் 174 மீற்றர் உயரத்தில் பிரமாண்டமான முறையில் இக்கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 400 மில்லியன் ரூபா நிதி இதற்கென செலவிடப்பட்டுள்ளது.
ரூபவாஹினி, சுயாதீனத் தொலைக்காட்சி உள்ளிட்ட அரச தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சி மற்றும் அரச, தனியார் வானொலிச் சேவைகள் ஆகியவற்றுக்கு தனித்தனிப் பிரிவுகள் இக்கோபுரத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கொக்காவில் பகுதியில் இத்தொலைத் தொடர்பு பரிவர்த்தனை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் வாழும் சகல மக்களும் தமக்கான தொலைக்காட்சி, வானொலி, தொலைத்தொடர்புச் சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
வடக்கு, கிழக்கு மக்களுக்கான ஒளி, ஒலிபரப்பு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் இக்கோபுரம் செல்லிடத் தொலைபேசி உள்ளிட்ட தொலைபேசிச் சேவைகளை பெற்றுக்கொள்ளவும் வழிவகுக்கிறது.
அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமது ஒளி, ஒலிபரப்பு சேவைகளை விஸ்தரித்துக்கொள்ள விரும்பும் தனியார் ஒளி, ஒலிபரப்பு சேவைகளுக்கும் அவர்களது ஒளி, ஒலிபரப்பு வீச்சுக் கோபுரமாக கொக்காவில் கோபுரம் அமையவுள்ளது.

0 commentaires :

Post a Comment