6/05/2011

கோட்டைக்கல்லாறு வாவியில் மூழ்கி உயிரிழந்த ஐந்து பேரின் சடலங்களும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கோட்டைக்கல்லாறு வாவியில்நேற்று மாலை வள்ளத்தில் பயணித்த போது வள்ளம் கவிழ்ந்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐந்து பேரின் சடலங்களும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கண்ணீர் மல்க இன்று சனிக்கிழமை மாலை கோட்டைக்கல்லாறு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கோட்டைக் கல்லாறு நடேசபரி வீதியிலுள்ள இவர்களின் வீடுகளில் இறுதிச்சடங்குகள் இடம்பெற்றன. அதன் பின்னர் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்ட இறுதி ஊர்வலத்தைத் தொடர்ந்து சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளூளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா இவர்களுக்கான இறுதி மரியாதையை செலுத்தினார். இவர்களின் இறுதிக்கிரியைகளில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல முக்கியஸ்த்தர்கள்; பொதுமக்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment