6/01/2011

கிழக்கு மாகாணசபை அமைச்சர் வாரிய விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பில்

  கிழக்கு மாகாணசபையின் அமைச்சர் வாரியக் கூட்டம் வழமையாக திருகொணமலையிர் இடம்பெறுவது வழமை. ஆனால் அண்மையில் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக ஆராயும் பொருட்டு மேற்படி விசேட அமைச்சர் வாரியக் கூட்டம் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்ப்பட்டது. இன்று (30.05.2011) மட்டக்களப்பில் முதலமைச்சரது மட்டக்களப்பு அலுவலகத்தில் மேற்படி கூட்டம் பி.ப 6.00மணிக்கு இடம் பெற்றது. அமைச்சர்களின் முடிவை அறிவிக்கும் இக் கூட்டத்தில் விசேடமாக அன்மையில் பேசப்படுகின்ற ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சனைகள் விரிவாக ஆராயப்பட்டது.
கிழக்குமாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், மாகாண அமைச்சர்களான போக்குவரத்து அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெவ்வே, கல்வி அமைச்சர் விமல வீர திஸாநாயக்க, விவசாய அமைச்சர் து.நவரெட்ணராஜா, பிரதம செயலாளர் பாலசிங்கம், பிரதி பிரதம செயலாளர் நிதி மயூரகிரிநாதன், மற்றும் சேவையின் பொருட்டு சமூகமளித்தோர்கள் வரிசையில் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்

0 commentaires :

Post a Comment