டுனிஷியாவின் கடற் பகுதியில் பாரிய கப்பலொன்று நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானதில் 270 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்தக் கப்பலில் சுமார் 600 பேர் பயணித்துள்ளனர். கடுமையான காற்று வீசியதாலும் அளவுக்கதிக மானோர் கப்பலில் பயணம் செய்ததாலும் இக்கப்பல் விபத்துக்குள்ளானது.
நைஜீரியா, டுனிஷியா, லிபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இவர்கள் அகதிகள் அந்தஸ்து பெறும் நோக்குடன் இத்தாலிக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டது.
இந்தக் கப்பலில் 480 ஆண்கள் 91 பெண்கள் மற்றும் 09 சிறுவர்கள் எனப் பலதரத்திலானோர் இருந்துள்ளனர். இவர்களில் இருநூறு பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களாவர். காணாமல் போனோரைத் தேடும் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை வரை தடைப்பட்டது. மோசமான காலநிலையும் கடலில் ஏற்பட்ட பாரிய கொந்தளிப்புமே இதற்குக் காரணமாகும்.
எனினும் இதுவரை இரண்டு பிரேதங்கள் கண்டெடுக்கப் பட்டதுடன் காயமடைந்த 07 பேரை மீட்டுள்ளதாகவும் இவர்களில் இரண்டு கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குவர் என மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
எனினும் கரைசேர்ந்தோரைத்தவிர காணாமல் போனோரை உயிருடன் மீட்பது சாத்தியமில்லையென்றும் கடலோரக் காவல் படையினர் கவலை தெரிவித்துள்ளனர். கப்பல் நீருக்குள் மூழ்கியதை யடுத்து மக்களைக் காப்பாற்ற படகுகள் அனுப்பப்பட்டன.
இவற்றில் தாவி ஏறமுற்படுகையில் நீரில் மூழ்கினர். இதுவரை இருநூறுவிக்கும் மேற்பட்டோர் கரை சேர்ந்துள்ளனர். இவர்களில் அதிகமானோர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களாவர். ஏனையோரை உயிருடன் மீட்பது சாத்தியமில்லையென அஞ்சப்படுகிறது.
0 commentaires :
Post a Comment