6/30/2011

மட்டக்களப்பு பாசிக்குடா கல்குடாவில், வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச்சங்க கிளையின் சுற்றுலா விடுதிக்கான அடிக்கல் நாடடும் விழா திங்கட்கிழமை (27.06.2011) அன்று கிளையின் தலைவர் சா.பஞ்சலிங்கம் தலமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு இவ் விடுதிக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தர்.
இந் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வீ.ரீ.பாலசிங்கம் மற்றும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் மாகாணசபை உறுப்பின் பூ.பிரசாந்தன் மற்றும் பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் மற்றும் மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி தலைமைக்காரியாலய பரிசோதகர் கே.கனகசுந்தரம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment