சிறி லங்கா உள்ளுராட்சித் தொழில்நுட்பவியல் சங்க 12வது மகாநாடு நேற்று (25.06.2011) மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நிமல் கருநாதிலால் தலமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் அதிதிகளாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமண்ற ஆணையாளர் ந.சத்தியானந்தி மற்றும் மாநகரசபை பிரதி மேயர் ஜோர்ச்பிள்ளை மற்றும் ஏனைய உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் உரையாற்றுகையில் கிழக்கு மாகாணத்தில் பல அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்ற வேளையில் அந்த அபிவிருத்தி பணிகளை திடமானதாகவும் மிக நீண்ட கால பாவனை உள்ளதாகவும் கண்கானிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தர்களுக்கும் உரியதாக இருக்கின்றது. 30 வருட யுத்தத்தின் பின்பு 3வருடங்களாக ஆட்சிபீடத்தில் இருக்கின்ற கிழக்கு மாகாணசபை பல உட்கட்டமைப்பு பணிகளை மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது. அந்த அபிவிருத்தி பணிகளை பொறுத்த வகையில் உள்ளுராட்சி மண்றங்கள் பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அதிலும் உள்ளுராட்சி திணைக்களத்திற்கான நேரடி அமைச்சர் என்ற வகையில் எங்களால் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் எமது உள்ளுராட்சிமன்ற தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தர்கள் மிகவும் காத்திரமானவர்களாக உள்வகிக்கின்றார்கள் அதில் எவ்விதமான ஐயமுமில்லை. அந்த பணிகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகின்றதா என மேற்பார்வை செய்யப்படுகின்ற பொறப்பு ஒவ்வொரு தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தர்களுக்கும் உள்ளது. சிறந்ததொரு உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டு செல்வதற்கு தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தர்களும் உறுதுனையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் உரையாற்றுகையில் தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தர்கள் அனைவரும் இனைந்து ஒன்றாக இருப்பது வரவேற்க்கத்தக்க விடையம், இந்த தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தர்கள் மேலும் பல பயிற்சிகளை மேற்கொண்டு மேலும் மேலும் தங்களது ஆளுமையினையும் வளத்துக்கொள்வதற்கு இந்த அமைப்பு உறுதுனையாக இருக்கவேண்டும் எனவும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் உரையாற்றுகையில் தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தர்கள் அனைவரும் இனைந்து ஒன்றாக இருப்பது வரவேற்க்கத்தக்க விடையம், இந்த தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தர்கள் மேலும் பல பயிற்சிகளை மேற்கொண்டு மேலும் மேலும் தங்களது ஆளுமையினையும் வளத்துக்கொள்வதற்கு இந்த அமைப்பு உறுதுனையாக இருக்கவேண்டும் எனவும் தெரிவித்துக் கொண்டார்.
0 commentaires :
Post a Comment