பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ஸ மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் முரளிதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான நா.திரவியம் மற்றும் எட்வின் சில்வா கிருஸ்னாநந்தராஜா மற்றும் பூ.பிரசாந்தன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்வில் 80 விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரம் மீயான்கல் குளத்தில் வைத்து வளங்கப்பட்டது. 420 மேட்டு நில பயிர்ச்செய்கை விவசாயிகளுக்கு மட்டக்களப்பு நகரில்வைத்து வளங்கி வைக்கப்பட்டது.
6/30/2011
| 0 commentaires |
மீயான்கல் குள புணர்நிர்மான அடிக்கல் நாட்டும் விழா.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ஸ மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் முரளிதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான நா.திரவியம் மற்றும் எட்வின் சில்வா கிருஸ்னாநந்தராஜா மற்றும் பூ.பிரசாந்தன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்வில் 80 விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரம் மீயான்கல் குளத்தில் வைத்து வளங்கப்பட்டது. 420 மேட்டு நில பயிர்ச்செய்கை விவசாயிகளுக்கு மட்டக்களப்பு நகரில்வைத்து வளங்கி வைக்கப்பட்டது.
| 0 commentaires |
இந் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வீ.ரீ.பாலசிங்கம் மற்றும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் மாகாணசபை உறுப்பின் பூ.பிரசாந்தன் மற்றும் பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் மற்றும் மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி தலைமைக்காரியாலய பரிசோதகர் கே.கனகசுந்தரம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
| 0 commentaires |
பாசிக்குடா கடற்கரையினை முகாமை செய்யும் பொறுப்பு கிழக்கு மாகாண சபைக்கு
6/29/2011
| 0 commentaires |
வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு விழாவில் கிழக்கு முதல்வர் கலந்து கொண்டார்.
| 0 commentaires |
கடாபி மீதான ஐ.சி.சி பிடியாணையை நிராகரித்தது லிபிய அரசு நேட்டோவின் திட்டத்தை செயற்படுத்துவதாக ஐ. சி. சி. மீது குற்றச்சாட்டு
லிபிய நீதி அமைச்சர் மொஹம்மட் அல் கமுதி மற்றும் லிபிய அரச பேச்சாளர் ஆகியோர் திரிபோலியில் ஊடகவியலாளர் மாநாட்டில் பங்பேற்றுள்ளனர். |
ஐரோப்பிய வெளிநாட்டு கொள்கையை செயற்படுத்தும் வேலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளதாக லிபிய நீதி அமைச்சர் மொஹம்மட் அல் கமுதி தெரிவித்தார்.
லிபியாவில் மனிதாபிமானத்திற்கு எதிராக செயற்பட்டது மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களை கொலைசெய்ய உத்தரவிட்ட குற்றத்திற்காக ஐ. சி. சி. லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி, அவரது மகன் மற்றும் அந்நாட்டு உளவுப்பிரிவுத் தலைவர் ஆகியோருக்கு நேற்று முன்தினம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. லிபியா மீது நேட்டோ தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு சரியாக 100 ஆவது நாளில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்நிலையில் ஐ. சி. சி. யின் பிடியாணை உத்தரவை லிபிய அரசு நிராகரித்துள்ளது. லிபியாவின் நீதியமைச்சர் மொஹம்மட் அல் கமுதி திரிபோலியில் நேற்று முன்தினம் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன் போது அவர் கூறியதாவது, "முஅம்மர் கடாபி மீதான பிடியாணை அரசியல் நோக்கத்திற்காக பிறப்பிக்கப்பட்டது.
இது கடாபியை கொல்லும் நேட்டோவின் முயற்சிக்கு உறுதுணையாக உள்ளது. ஐ. சி. சி. ஐரோப்பிய நாடுகளின் வெளிவிவார கொள்கைகளை நிறைவேற்றும் அமைப்பாகவே உள்ளது. எனவே, அது அரசியல் நீதிமன்றமாக தனக்கு சம்பளம் தரும் ஐரோப்பாவை பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
எமது நாட்டு நீதிமன்றங்கள் மனித உரிமை விவகாரம் குறித்த விசாரணை நடத்தும்" என்றார்.
எனினும் கடாபி மீதான குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை மூலமே நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் ஐ. சி. சி. நீதிபதி சன்ஜிமி மசெனொனோ மெனகங் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடாபி மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து லிபியா வின் கிளர்ச்சிப்படை தலைமையகமான பெங்காசியில் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் அல் ஜெkரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
பெங்காசியில் மக்கள் பட்டாசு கொளுத்தி கடாபியின் பிடியாணை உத்தரவுச் செய்தியைக் கொண்டாடியதாகவும், கிளர்ச்சிப்படையினர் வானத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு தமது மகிழ்ச்சியைத் தெரிவித்ததாகவும் அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியில் உள்ள நாட்டுத் தலைவர் ஒருவருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பது இது இரண்டாவது தடவையாகும். இதற்கு முன்னர் கடந்த 2009 ஆம் ஆண்டு சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பiர் மீது பிடியாணை பிடிப்பித்தது.
எனினும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் அவரை கைது செய்ய முடியாத நிலை உள்ளது. ஐ. சி. சி. பிடியாணைக்குப் பின் கட்டார், சாட் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஒமர் அல் பஷிர் தற்போது நான்கு நாள் விஜயமாக சீனா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
| 0 commentaires |
ரிஸானாவை காப்பாற்றுங்கள் சவூதி அரேபியாவிடம் ஹக்கீம்
ரிஸானா நபீக்குக்கு மரணதண்டனை நிறைவேற்றிவிடப் போவதாக வெளியாகியுள்ள செய்தியை அறிந்ததும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் 50வது வருடாந்த அமர்வு கொழும்பில் நடைபெறுகிறது.
இந்த அமைப்பின் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ள அமைச்சர் ஹக்கீம், இச்செய்தியை அறிவித்ததும் இலங்கைக்கான சவுதி அரேபிய பதில் தூதுவர் பாரூக் வkர் அலி, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம, ஆசிய ஆபிரிக்க சட்ட ஆலோசனை மாநாட்டில் பங்குபற்றியுள்ள சவூதி அரேபியக் குழுவுக்கான தலைவர் மன்ஸ¥ர் அலி கப்பாரி ஆகியோரை அழைத்து நீண்ட நேரம் கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலின் போது அமைச்சர் ஹக்கீம், நாம் சவூதி அரேபியாவின் ஷரியா சட்டங்களை மதிக்கிறோம். உங்களது நீதித்துறையில் நாம் தலையிட விரும்பவில்லை. என்றாலும், மனிதாபிமான அடிப்படையில் கருணைகாட்டி மரணதண்டனைக் கைதியாகவிருக்கும் ரிஸானா நபீக்குக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும். இதற்காக குழந்தையின் பெற்றோர் முன்வரவேண்டும். கோத்திரத் தலைவர்கள் ஊடாக அப்பெற்றோரை சந்தித்து கருணைகாட்டி ரிஸானாவை விடுதலை செய்ய சவூதி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அந்தப் பெற்றோருக்கு உயிரிழப்புக்கான நஷ்ட ஈட்டை (பிளட் மணி) வழங்கவும் இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவொன்றை சவூதி அரேபியாவுக்கு அனுப்பி பெற்றோரை அணுகி கலந்துரையாடவும் நாம் தயாராகவுள்ளோம்.
ரிஸானாவுக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கோரி அக்குழந்தையின் பெற்றோருக்கு நான் ஏற்கனவே கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளேன். ரிஸானாவுக்கு மரணதண்டனை வழங்கப்போவதாக வெளியாகியிருக்கும் செய்தி இலங்கை முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமன்றி முழு நாட்டு மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.
இக்கலந்துரையாடலின் போது வெளிவிவகார அமைச்சின் ஊடாக சவூதி அரேபியாவுக்கு அவசரக்கடிதமொன்றை அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
6/28/2011
| 0 commentaires |
ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் தலைவராக அமைச்சர் ஹக்கீம்
ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் 50 ஆவது வருடாந்த செயலமர்வின் போது புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் பதவியேற்ற பின் நிகழ்வுகளுக்கு தலைமை தாங்குவதை படத்தில் காணலாம். (படம்: பாலமுனை நிருபர் றிபாஸ்) |
ஆசிய - ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் ஐம்பதாவது வருடாந்த அமர்வு கொழும்பு சினமன்லேக் சைட் ஹோட்டலில் நேற்று ஆரம்பமானது.
நேற்று முதல் ஜுலை மாதம் முதலாம் திகதி வரையும் நடைபெறவிருக்கும் இந்த சர்வதேச அமர்வை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுக் காலை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இந்த சர்வதேச அமர்வில் ஆசிய ஆபிரிக்கக் கண்டங்களிலுள்ள 47 நாடுகளின் இருநூறு பிரதிநிதிகள் பங்குபற்றியுள்ளனர்.
இவர்களில் ஒன்பது நாடுகளின் நீதியமைச்சர்கள், சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் ஹிஸாஸி ஓவாடா, ஆறு நாடுகளின் சட்டமா அதிபர்கள் அடங்கியுள்ளனர்.
இச்சர்வதேச அமர்வை ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் நடைபெற்ற பிற்பகல் அமர்வின்போது இந்த அமைப்பின் தலைவராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த அமைப்பின் தலைவராக அமைச்சர் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவ்வமைப்பின் பதவி விலகிச் செல்லும் தலைவரான தன்ஸானியா நாட்டு அரசியல் விவகார, நீதியமைச்சர் செலினா கும்பானி அமைப்பின் தலைமைப் பொறுப்புக்களை அமைச்சர் ஹக்கீமிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
இந்த ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் ஸ்தாபக நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இந்த அமைப்பு நான்காவது தடவையாக தனது வருடாந்த அமர்வை இம்முறை இலங்கையில் நடாத்துகின்றது- ஏற்கனவே 1960 ஆம், 1971 ஆம், 1981 ஆம் ஆண்டுகளிலும் இந்த அமைப்பு தனது வருடாந்த அமர்வுகளை இந்நாட்டில் நடத்தியுள்ளது.
| 0 commentaires |
கல்முனை, காரைதீவு விசேட அதிரடிப்படை முகாம்கள் மூடப்பட்டன
கடந்த ஒருவார காலமாக படைத் தளபாடங்கள் அகற்றப்பட்டு லொறிகளில் அனுப்பப்பட்டு வந்தன.
1990 வன் செயலின் பின்னர் அமைதியை நிலைநாட்டுவதற்காக விசேட அதிரடிப்படையினர் முதன் முதல் இங்கு கொண்டுவரப்பட்டனர்.
இம் முகாம் கிழக்கு மாகாணத்தின் பிரதான கட்டளையிடும் முகாமாக திகழ்ந்தது. சிங்க றெஜிமண்டின் இராணுவ உயரதிகாரி எம். அமரசேகர மேற்படி முகாமை அமைத்திருந்தார்.
காரைதீவு உதவி அரச அதிபர் பணி மனை, காரைதீவு பிரதேச சபைக் காரி யாலயம், விபுலானந்த ஞாபகார்த்த நூலகம் மற்றும் தனியார் கட்டடங்கள் இம்முகாமிற்குள் கொண்டுவரப்பட்டு பலத்த காவலிடப்பட்டன. தனியார் வீடுகளுக்கு வாடகையும் வழங்கப்பட்டு வந்தது. சிலருக்கு நில வாடகை வழங் கப்பட்டு வந்தன. விசேட அதிரடிப்படை கட்டளைத் தளபதியாகவுள்ள நிமால் லியூக்கே காரைதீவு முகாமில் ஆரம்பத்தில் சேவையாற்றியவராவார்.
காரைதீவு முகாமிலிருந்து வெளியேறும் படையினர் மல்வத்தை வவுனியா போன்ற பிரதேசங்களுக்குச் செல்கின்றனர்.
இதேவேளை, கல்முனை கடற்கரைப் பிரதேசத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட விசேட அதிரடிப் படை முகாமும் இன்று முற்றாக மூடப் படவுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், அறுகம்பை, கோமாரி, அக்கரைப்பற்று, கஞ்சிக்குடிச்சாறு, காஞ்சிரம் குடா, சாகாமம், வம்மியடி, திருக்கோவில் போன்ற விசேட அதிரடிப்படை முகாம்களிலிருந்து ஏற்கனவே படையினர் வெளியேறி முகாம்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6/26/2011
| 0 commentaires |
சிறிலங்கா உள்ளுராட்சித் தொழில்நுட்பவியல் உத்தியோகஸ்த்தர் சங்கம் 12வது மகாநாடு மட்டக்களப்பில் இடம் பெற்றது.
மேலும் உரையாற்றுகையில் தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தர்கள் அனைவரும் இனைந்து ஒன்றாக இருப்பது வரவேற்க்கத்தக்க விடையம், இந்த தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தர்கள் மேலும் பல பயிற்சிகளை மேற்கொண்டு மேலும் மேலும் தங்களது ஆளுமையினையும் வளத்துக்கொள்வதற்கு இந்த அமைப்பு உறுதுனையாக இருக்கவேண்டும் எனவும் தெரிவித்துக் கொண்டார்.
| 0 commentaires |
புலிகளின் நிதியை மீட்க முயல்வேன்'
| 0 commentaires |
என்னுடைய அந்த புலிஆதரவு நிலைப்பாடு என்னுடைய மகன் மீது கொண்டுள்ள பாசம் மட்டுந்தான்
-கற்சுறா-
அடுத்ததாக என்னவென்றால் நான் புலி ஆதரவாளன் என்றவகையில் நிச்சயமாக நான் அதனை எதிர்க்கவில்லை. நான் எதிர்த்தது இலக்கியவாதி என்ற அதே கோதாவிலேதான். ஏனென்றால் இலக்கியவாதிகளுடைய அக்கறைகள் அரசியல் சார்ந்த அக்கறைகளாக மாறிவிடக்கூடாது. அரசியல் பேசுவது வேறு அரசியல் சார்புகொண்டிருப்பது வேறு. ஆனால் இலக்கியம் செய்யும் எழுத்தையும் அரசியல் ஆக்கிக் கொள்ளக்கூடாது. ஆனால் முருகபூபதி போன்றவர்கள் அதை அரசியலாக்கியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனை எதிர்த்தேன். முதற்தடவை கூடவேண்டாம் என்று சொன்ன பிறகு எந்தக் கட்டத்திலும் அதனை எதிர்த்து எந்தவித அறிக்கைகளும் நான் விடவில்லை. ஒதுங்கியிருந்தேன். மற்றவர்களுக்குத் தில் இல்லை. உண்மையாக கல் எறியமுடியாதவர்களாக திராணியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று முதல் கல் எறிந்தவன் நான். அதன் பிறகு இதை நடாத்து – நடத்தவேண்டாம் என்று பிரசாரம் செய்ததே கிடையாது. அதற்குப் பிறகு அந்தக் கூட்டத்திலே ஒவ்வொரு பேச்சாளனாக எழுந்து என்னை ஏசியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை விளங்கவேண்டும் நான் ஏச்சிலே பிறந்து ஏச்சிலே வளர்ந்து ஏச்சிலேயே வாழ்ந்து கொண்ருப்பவன். உங்களுடைய ஏச்சு என்னை ஒன்றும் செய்யமுடியாது. இங்கே மொன்றியலில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறீஸ்கந்தராசா என்னுடைய நல்ல நண்பன். இந்த முறை என்னை வந்து சந்திக்கவில்லை என்பது எனக்கு மகாதுக்கம். இல்லை எனில் இந்த சனிக்கிழமை மொன்றியலுக்குச் சென்றிருப்பேன். அவர் வந்து சொன்னார் ‘evrry speaker literally cruciffied you’ என்று. எவ்வளவு மகிழ்ச்சி. என்னத்துக்கு என்னைச் சிலுவையில் அறைய வேண்டும்? ஏன் நான் கடந்த 65ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டிருப்பது குற்றமா? இந்த 65 ஆண்டுகளில் இன்றும் ஈழத் தமிழர்களுடைய இலக்கியம் Archive இல்அழிக்கப்பட்டவிடும், அதைப் பாதுகாத்து நாளைய சந்ததிக்குக் கொடுக்கவேண்டும் என்று சொல்லி கடந்த நான்கு வருடங்களாக ஆறாயிரம் பக்கங்களை எடிற் செய்து கொண்டிருப்பது ஈழத் தமிழர்களுக்கு நான் செய்யும் துரோகமா?
6/25/2011
| 0 commentaires |
வடக்கு, கிழக்கு நிர்வாக சேவை திட்டம்
6/24/2011
| 0 commentaires |
இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் கிழக்கு மாகாண பொறியியலாளர்களுக்கான விசேட செயலமர்வு.
| 0 commentaires |
மக்கள் மீதான நேட்டோ தாக்குதலுக்கு ஐ.நா தனி விசாரணை கோருகிறார் கடாபி
மக்கள் மீதான நேட்டோ தாக்குதலுக்கு ஐ.நா தனி விசாரணை கோருகிறார் கடாபி
நேட்டோ படைகள் பொதுமக்கள் மீது நடத்தும் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கெளன்ஸில் தனிவிசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி கேட்டுக்கொண்டுள்ளார்.
லிபிய அரச தொலைக்காட்சியில் தொலைபேசி மூலம் பேசியபோதே கடாபி இந்த வேண்டுகோளை விடுத்தார்.
திரிபோலியில் குடியிருப்பு பகுதி மீது நேட்டோ படை நடத்திவரும் தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனமான செயல் என கடாபி விமர்சித்தார்.
இதில் கடாபி மேலும் கூறும்போது; நாங்கள் முஸ்லிம்கள் அதனால் நீங்கள் வெறுக்கிaர்கள். எங்கள் மக்கள் மீது குண்டு மழை பொழிகிaர்கள். நான் மக்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்கிறேன் இராணுவ தளங்களை மட்டும் தாக்குவதாக கூறிக்கொள்ளும் நேட்டோ படைகள் திரிபோலியின் குடியிருப்பில் தாக்குதலை நடத்துகிறது என்றார்
6/23/2011
| 0 commentaires |
ஜோர்தானில் கிழக்கு மாகாண பெண்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு
| 0 commentaires |
கிழக்கு மாகாணத்தில் போக்குவரத்தினை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – கி.மா.முதலமைச்சர் சி.சந்திரகாந்தன்
| 0 commentaires |
ஆதிக்குடி தலைவருடன் முதலமைச்சர் சந்திரகாந்தன் சந்திப்பு
கிழக்கு மாகாணத்திலே அம்பாரை மாவட்டத்தில் தெஹியத்த கண்டி பிரதேசத்தில் வாழ்கின்ற தாம் குறிப்பிட்ட சில பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும். அது தொடர்பில் முதலமைச்சருக்கு தெரியப்படுத்தி தங்களுக்கான உதவிகளை பெற்றுக் கொள்வதற்காவே தாம் இச்சந்திப்பை மேற்கொண்டதாவும் அவர் தெரிவலித்தார்.
| 0 commentaires |
பிரபாகரனின் மனைவியல்ல தமிழ்ச் செல்வனின் மனைவி: அஸ்வர் _
இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், 'நான் நேற்று நாடாளுமன்றத்தில் தவறுதலாக தமிழ்செல்வனின் மனைவி பிள்ளைகள் என்பதற்குப் பதிலாக பிரபாகரன் மனைவி பிள்ளைகள் என்று கூறிவிட்டேன் இதற்காக சபையினரிடம் மன்னிப்பு கோருகின்றேன்" என்றார். _
| 0 commentaires |
இறுதிக் கட்டத்தில் தமிழர்களை புலிகள் சுட்டுக் கொன்றனர் தமிழர்கள் புலிகளால் பணயம் வைப்பு அமைதியை ஏற்படுத்தியதற்கு தமிழ் மக்கள் பாராட்டு
‘கார்டியன்’ கட்டுரைக்கு இலண்டனில்
வசிக்கும் இலங்கைத் தமிழர் பதிலடி
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எல்.ரி.ரி.ஈ தமிழ் மக்களை சுட்டுக்கொன்றதாகவும், அவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்தியதாகவும் பிரிட்டனில் வாழும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட எஸ். வாசுதேவன் என்பவர் அங்கிருந்து வெளியாகும் கார்டியன் நாளிதழுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கார்டியன் பத்திரிகை இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவம் யுத்த மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அண்மையில் விசேட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் முகமாக எஸ். வாசுதேவன் என்பவர் அந்த பத்திரிகைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
‘உங்களது பத்திரிகையில் கடந்த 13.06.2011ஆம் திகதியில் பிரசுரித்திருந்த கட்டுரைக்கு அதிருப்தி அடைந்தே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அந்த கட்டுரையில் இலங்கை அரசு மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை நான் முற்றாக மறுக்கிறேன். 2009ம் ஆண்டு யுத்தம் முடிந்த பின் நான் இலங்கைக்கு நான்கு முறை சென்றுள்ளேன். அதன்போது யுத்தத்துக்கு முகம் கொடுத்த பலருடன் கலந்துரையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர்களின் கருத்துக்கு முற்றும் முரணான செய்தியே உங்களது பத்திரிகையிலிருந்த கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.
நான் சந்தித்த மக்கள் இறுதிக்கட்ட யுத்தத்தில் தப்பி வந்தவர்களாவர். அவர்களை இலங்கை இராணுவம் தியாகத்துடன் இன்னும் பாராமரித்து வருகின்றனர். இறுதிக்கட்ட யுத்தத்தில் தமது தியாகத்தால் 6,000 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதில் எல்.ரி.ரி.ஈ யினால் தமிழ் மக்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர் என்பதே உண்மை.
மேற்படி கட்டுரையில் கூறப்பட்டிருந்த 40 ஆயிரம் பொதுமக்கள் காயமடைந்தனர் என்ற தகவல் தவறானது என்பதை குறிப்பிடுகின்றேன். இது பிரிட்டன் தமிழ் போரம் அழைப்பினால் வெளியிடப் பட்டது. இது குறித்து நீங்கள் உண்மையான விசாரணை செய்வதாக இருந்தால் 2009ம் ஆண்டு காயமடைந்தோர் பற்றிய தகவலை பெற்றிருக்க வேண்டும்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது யுத்த சூன்ய பிரதேசத்திற்குள் எல்.ரி.ரி.ஈ தனது கனரக ஆயுதங்களுடன் போரிட்டது. இந்த பகுதிக்குள் அவர்கள் தமது கனரக ஆயுதங்களை கொண்டுவந்தது மட்டுமல்லாது மருத்துவமனை வளாகத்திற் குள்ளும் ஆயுதங்களை கொண்டு சென்றனர். இந்த நடவடிக்கையால் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
யுத்தத்தின் போது கொல்லப்பட்ட எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களையே யூடியூப் இணையத்தளத்தில் உங்களால் காண முடிகிறது. இதனை தமிழர்களும் உறுதிப்படுத்துவார்கள். எல்.ரி.ரி.ஈ அப்பாவி தமிழ் மக்களை கொன்றது மட்டுமல்லாது அவர்களது உடைமைகளையும் கொள்ளையிட்டனர்.
எல்.ரி.ரி.ஈக்கு சமாதான வழியில் அரசியல் தீர்வை பெற பல வாய்ப்புகள் கிடைத்தன.
ஆனால் அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் புறக்கணித்தனர். இதனால் எல்.ரி.ரி.ஈயை முடிவுக்கு கொண்டு வருவதை விட இலங்கை அரசுக்கு வேறு வழி இல்லாமல் போனது. ஆம், எல்.ரி.ரி.ஈக்கு எதிராக இலங்கை அரசு கடுமையான யுத்தத்தை முன்னெடுத்தது. ஆனால் அவர்கள் இப்போது இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். இலங்கை அரசு யுத்தத்தின் போது ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
இதன் மூலம் நல்ல தீர்வு கிட்டும் என எதிர்பார்க்கிறேன்.
இலங்கை தமிழ் மக்கள் ஏனைய மக்களுடன் இணைந்து இலங்கையில் அமைதியாக வாழ்வதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
எனவே, பழைய கசப்பான சம்பவங்களை கிளரி அமைதியை குலைக்க வேண்டாமென்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு அந்த கடிதத்தில் எஸ்.வாசுதேவன் கூறியுள்ளார்.
6/22/2011
| 0 commentaires |