5/20/2011

நெடியவன் கைது

நோர்வேயில் புதிய தலைவராக செயற்பட்டு வந்த நெடியவன் கைது செய்யபட்டு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் நீதிமன்றில் நிறுத்தபட்டுள்ளார்.
கொலன் நாட்டில் இருந்து வந்த சர்வதேச பொலிசாரால் நெடியவனின் வீடு சுற்றி வளைக்கபட்டு தேடுதலுக்கு உள்ளாக்கபட்டு நெடியவன் கைது செய்பட்டதுடன் அவர் உடனடியாக நோர்வே தலைநகரம் ஒஸ்லோவுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுவரபட்டு நீதிமன்றில் நிறுத்தபட்டார்.
நெடியவன் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு தினங்களாக ஜரோப்பிய பயங்கரவாத சட்டபடியான வழக்கை எதிர் நோக்கி வருகின்றார்.

நோர்வே நாட்டில் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் வேலை செய்து வருகிறார் நெடியவன். புலி பயங்கரவாதத்திற்கு பல மில்லியன் பணத்தை இவர் ஜரோப்பாவில் இருந்து கையாள்வதாக கொலன் நாட்டு பொலிசார் நோர்வே நாட்டு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

கொலன் நாட்டு அரசாங்கம் கேட்டுக் கொண்டபடி இரகசிய நீதிமன்ற வழக்கு ஒண்றை நோர்வே நாட்டின் நீதிமன்றில் கொலன் அரசாங்கம் நடத்தி வருகிறது.

கொலன் நாட்டின் பயங்கரவாத நிபுணரின் குற்றச்சாட்டுபடி நெடியவன் மிகவும் பலம் பொருந்திய முக்கியமான முதுகெலும்பாக புலிகள் இயக்த்திற்கு செயல்பட்டுள்ளதுடன் முக்கிய பாத்திரமும் வகித்துள்ளார்.

நோர்வேயின் தலைநகரத்திற்கு வெளியே பேகன் என்ற மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு பிராந்தியத்தில் வாழ்ந்துவரும் நெடியவனின் வீடு கொலன் நாட்டு பொலிசாரால் முற்றுகையிடப்பட்டதுடன் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தினர்.

கொலன் நாட்டில் இருந்து வந்த பொலிசார் நெடியவனின் வீட்டை நீதிமன்ற அனுமதியுடன் சோதனை செய்தனர். புலிகள் ஜரோப்பிய சட்டபடி பயங்கரவாதிகளாக அறிவிக்கபட்டுள்ளதால் புலிகளின் பணத்தை கையாண்ட நெடியவன் பயங்கரவாத சட்டபடி இந்த தேடுதல் வேட்டைக்கும் விசாரணைக்கும் உட்டபட்டதாக ரிவி2 தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

0 commentaires :

Post a Comment