5/18/2011

அரசாங்கத்துடனான உறவுக்கு நாளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் முற்றுப்புள்ளி ? கட்சியின் உயர் பீடம் அவசரமாக கூடுகிறது




கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இராணுவத்தினர் முதலமைச்சர் சந்திரகாந்தனை வெளியே வருமாறு அழைத்து பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியதாக முதலமைச்சர் தரப்பு கூறுகின்றது. முதலமைச்சருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் பிரத்தியேக பாதுகாப்பிற்காக அதிரடிப்படையினரும், எம்.எஸ்.டி பொலிசாரும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருந்தும் இவர்களையெல்லாம் மீறி  அத்துமீறி அவர்களது அலுவலகத்திற்குள் நுழைந்த இராணுவ வீரர்கள் அனைவரும் தங்களை இனம் காட்டிக்கொள்ளாத வகையில் கறுப்பு துணியால் தங்களது முகங்களை மறைத்திருந்தார்கள் எனவும் கூறப்படுகின்றது. பின்னர் முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவினருக்கும் வந்த இராணுவ வீரர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு பின்னர் அங்கு வந்த இராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இது தொடர்பாக நாளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனது உயர்மட்ட கூட்டத்தினை கூடி ஊடகவியலாளர்கள் மாநாட்டை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இக்கூட்டத்தில் மிகவும் எதிர்பாராத முடிவு ஒன்று காத்திருப்பதாக முதலமைச்சர் தரப்பு உள்ளார்ந்த செய்திகள் குறிப்பிடுகின்றது.

0 commentaires :

Post a Comment