ஈழத்தின் இலக்கியத் துறைக்கு அரும்பணியாற்றிய மூத்த தமிழறிஞரும்; இலக்கியவாதியுமான கலாநிதி வைரமுத்து சிவசுப்பிரமணியம் தனது 93ஆவது வயதில் இன்று மாலை காலமானார்.
நீண்டகாலமாக சுகவீனமுற்றிருந்த இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று மாலை காலமானார்.
1918.08.17இல் பிறந்த இவர் பல்வேறு நூல்ளை எழுதியுள்ளதுடன் பல அமைப்புக்களின் முக்கிய உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.
இவருடைய இலக்கியப் பணியினை கௌரவித்த கிழக்குப் பல்கலைக் கழகம், கடந்த 2004ஆம் ஆண்டு இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்தது. சுருதி நூல்முறை, நாட்டாரியம், மகாத்மா காந்தி, விபுலானந்தர் தரிசனம் போன்ற நூல்களை எழுதியதுடன் சுவாமி விபுலானந்தரின் ஆக்கங்களை இலக்கிய கலாநிதி சா.இ.கமலநாதனுடன் இணைந்து தொகுத்துள்ளார்.
1992ஆம் ஆண்டு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாவை நடத்துவதற்கு காரணமாக இருந்து அதனை முன்னின்று நடத்தியதுடன் நூற்றாண்டு விழா மலர் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவராகவும் கிழக்கிலங்கை புனர்வாழ்வுக் கழகத்தின் உப தலைவராகவும் இருந்து அரும்பணி ஆற்றியதுடன் மட்டக்களப்பில் உள்ள பல்வேறு கலை இலக்கிய அமைப்புக்களில் பணியாற்றியுள்ளார்.
இவரது பூதவுடல் நல்லையா வீதியில் உள்ள அன்னாரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 4 மணிக்கு கள்ளியங்காட்டு, சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி
0 commentaires :
Post a Comment