கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கிராமங்கள் தோறும் மக்களின் காலடிக்கே சென்று அவர்களினது தேவைகளை கேட்டறிந்து அவர்களது பிரச்சனைக்கு தீர்வு கண்டு வருகின்றார். அந்த வகையில் இன்று 08.05.2011 செங்கலடி செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலர்சேனை மற்றும் மாவடிஓடை கிராமத்துக்கு நேரடியாகச் சென்று அம் மக்களது பிரச்சனைகளை கேட்டறிந்து குறிப்பிட்ட சில பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கண்டுள்ளார். அந்த வகையில் பாலர்;சேனை கிராம மக்கள் புதிதாக குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள். இக் கிராமத்திலே சுமார் 400 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களது அடிப்படை பிரச்சனைகளாக மின்சாரம், வீடுகள் என்பன முதலமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன.
இதனடிப்படையில் வீடற்று இருக்கின்ற மக்களது விலாசங்கள் சேகரிக்கப்பட்டு கிராம சேவகர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்து மின்சாரமானது கிழக்கு மாகாணத்திலே அனைத்து கிராமங்களிற்கும் வழங்கப்பட இருக்கின்றது. அந்த வகையில் இக் கிராமத்திற்கு முன்னுரிமை அளித்து இக்கிராம மக்களினது முக்கிய தேவையான மின்சாரப்பிரச்சனையும் தீர்த்து வைக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
மேலும் மாவடிஓடை கிராம மக்கள் தற்போதுதான் குடியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். இவர்களது பிரச்சனைகளாக காட்டு யானை தொல்லை, குடிநீர் பிரச்சனை மற்றும் சேனைப்பயிர்ச் செய்கையினை மேற்கொள்வதற்கான இயந்திரங்கள் தொடர்பாக முதலமைச்சருக்கு மக்கள் தெரியப்படுத்தினர். இதற்கு முதலமைச்சர் உடனடி தீர்வு வழங்கினார். சேங்கலடி பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு உடனடியாக 8 தற்காலிக கிணறுகள் அமைப்பதற்கான குழாய்களையும் மற்றும் யானைத்தொல்லையை இல்லாதொழிக்க சீனவெடிகள் மற்றும் அவர்களது சேனைப்பயிர்ச் செய்கையினை மேற்கொள்வதற்கு நீர் வழங்கும் இயந்திரங்களையும் வழங்குவதற்காக நடவடிக்கையினை எடுக்குமாறு பணித்தார். இக் கலந்துரையாடலில் இப் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராமசேவை உத்தியோகஸ்த்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் மற்றும் ரி.எம்.வி.பி முக்கியஸ்தர்களும் சமூகமளித்தனர்.
குறிப்பு-
முதலமைச்சர் சந்திரகாந்தன் விஐயம் செய்த மேற்குறித்த 2கிராமங்களும் செங்கலடி பதுளை வீதியினூடாக அதாவது கறுத்த பாலத்தை கடந்து இருக்கின்றது. தற்போது கறுத்தப்பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளதால் இப்பாலத்தினூடாக வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையிலும் கூட முதலமைச்சர் சந்திரகாந்தன் தனது வாகனங்களை பாலத்தின் முன்பாக நிறுத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று அம்மக்களுடன் கலந்தரையாடியது விசேட அம்சமாகும். ஏத்தனையோ அரசியல்வாதிகள் அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தும் பல நிகழ்வுகளை தவிர்த்தும்; இக்காலத்தில் போக்குவரத்து பிரச்சனைகளையும் பொருட்படுத்தாது மக்களுக்காக சேவை செய்யும் இம் முதலமைச்சர் ஏனைய அரசியல்வாதிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்பது மிகையாகாது.

0 commentaires :
Post a Comment