5/18/2011

ஜனாதிபதியின் விசேட அழைப்பின் பேரில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உயர்பீடம் நாளை சந்திப்பு



தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்ற நிலையில். நேற்று இரவு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தனின் வாசஸ்த்தலத்திற்குள் அத்துமீறி நுழைந்த இராணுவத்தினர் தேடுதல் நடாத்தியமை தொடர்பாகவும் .தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பிருமான எட்வின் சில்லா கிருஸ்ணானந்தராஜா கைது செய்யப்பட்டமை தொடர்பாகவும் ஆராயும் முகமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உயர்மட்டக் குழு இன்று கூடியது. இச் கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் கட்சியின் முக்கியஸ்த்தர்களினால் முன்வைக்கப்பட்டது. அரசோடு இணைந்து செயற்படுகின்ற முதலமைச்சாருக்கே இந் நிலை என்றால் மக்களுக்கான பாதுகாப்பு என்ன? நாளை இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ அவர்களை சந்தித்து தமது கட்சியின் நிலைப்பாட்டினையும் அதிருப்தியினையுளும் வெளியிடுவதாக கட்சியின் உயர்மட்டம் தெரிவித்துள்ளது

0 commentaires :

Post a Comment