5/27/2011

விவசாயி ஒருவர் துப்பாக்கி சூட்டில் படுகாயம்

.
மட்டக்களப்பு எல்லைக் கிராமமான முறுத்தானைப் பகுதியில்  இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி விவசாயி ஒருவர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான மேற்படி குடும்பஸ்த்தர் தான் வயலுக்குச் செல்லும் போது மறைந்திருந்த ஒருவர் தன்னை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கறுப்பு முகமூடியணிந்த ஒருவரே தன்னை சுட்டதாகவும் அவர் தனது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார். இன்று பிற்பகல் 1மணியளவில் மேற்படி சம்பவம் இடம்பெற்றது. பொண்டுகள்சேனை பூலாக்காட்டைச் சேர்ந்த  தியாகராஜா குகன்(26) என்பவரே மேற்படி காயமடைந்த விவசாயி ஆவார். மேலதிக விசாரணைகளைப் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்

0 commentaires :

Post a Comment