5/24/2011

கிழக்கின் மாபெரும் அறிவியல் கண்காட்சி இன்று ஆரம்பம்







கிழக்கின் மாபெரும் அறிவியல் கண்காட்சி நேற்று கிண்ணியா அப்துல் மஜீது வித்தியாலயத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் எச். எம். எம். பாயிஸ் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ். சந்திரகாந்தன் ஆகியோர் முதன்மை அதிதிகளாக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தனர்.
நேற்று திங்கள் 23 ஆம் திகதி முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் நான்கு பாடசாலைகளில் நடைபெறவுள்ளன.
இக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் மூவினங்களைச் சேர்ந்த சமயப் பெரியார்கள் கலந்துகொண்டதோடு கிழக்கின் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதேவேளை கிழக்கு மாகாணத்திலுள்ள 16 கல்வி வலயங்களுக்குட்பட்ட 1012 பாடசாலைகளைச் சேர்ந்த மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் 23 ஆசிரியர்களும் இக் கண்காட்சியை பார்வையிடவுள்ளதாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளரும் கண்காட்சி ஒழுங்கமைப்பாளருமான யு. எல். எம். ஹாசீம் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment