5/27/2011

கல்லோயா சந்தியிலிருந்து திருமலைக்கான ரயில்பஸ் சேவை இன்று ஆரம்பம்

கல்லோயா சந்தியிலிருந்து திருமலைக்கான ரயில்பஸ் சேவை இன்று(26.05.2011) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட மேற்படி ரயில்பஸ் சேவை ஏலவே பயன்பாட்டில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தமாக இந்திய அரசினால் 5ரயில்பஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளுக்கமைய கிழக்கு மாகாணத்திற்கென விசேடமா மேற்படி ரயில்பஸ்கள் வேவையில் ஈடுபடுத்தப்பாட்டுள்ளன. மட்டக்களப்பிலிருந்து பொலன்நறுவை மற்றும் தற்போது இன்று ஆரம்பித்து வைக்கப்பட்வை கல்லோயாசந்தியிலிருந்து திருகோணமலைக்கும் சேவையில் ஈடுபடுத்தகப்பட்டுள்ளன. இன்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமே மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் ஆகியோர் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்கள்.

0 commentaires :

Post a Comment